Published:Updated:

ஆளுநர் கார் மீது தாக்குதல்: ``முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்" -அண்ணாமலை

அண்ணாமலை

தமிழக ஆளுநர் கார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதற்காகத்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஆளுநர் கார் மீது தாக்குதல்: ``முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்" -அண்ணாமலை

தமிழக ஆளுநர் கார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதற்காகத்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Published:Updated:
அண்ணாமலை

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினம் புனித பயணம் புறப்படும் தொடக்க விழாவுக்குத் தமிழக ஆளுநர் ரவி சென்றிருந்தார். ஆளுநர் ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விசிக, திக உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மீது கல், கையில் இருந்த கறுப்புக் கொடி முதலியவை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இது தொடர்பாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ``தமிழக ஆளுநர் சென்ற கார் மீது மயிலாடுதுறையில் கல்வீசித் தாக்கி உள்ளார்கள். மாநிலத்தின் ஆளுநருக்கே பாதுகாப்பில்லை என்ற நிலையில் பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்? தினமும் கொலை, பாலியல் வன்முறைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. சட்ட ஒழுங்கு முற்றிலும் கெட்டுவிட்டது. 

ஆளுநர் ரவி - மயிலாடுதுறை ஆதினம்
ஆளுநர் ரவி - மயிலாடுதுறை ஆதினம்

ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணைக் கட்டிக் கொண்டு தனது கட்சி சித்தாந்தத்துக்காக மத்திய அரசை எதிர்ப்பது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளார். தி.மு.க தலைவர்களின் தூண்டுதலின் பேரிலேயே தி.மு.க தொண்டர்கள் ஆளுநரின் காரின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். ஆளுநரின் உயிருக்கு ஆபத்து என்பதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. முதலமைச்சர் இன்று மாலைக்குள் ஆளுநரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும். 

அநாகரிகமாக நடத்தப்படும் இந்த தாக்குதலை எதிர்த்து கலவரத்தை உருவாக்குவதற்கு பா.ஜ.க விரும்பவில்லை. ஆளுநரின் பாதுகாப்பில் எந்த சமரசத்திற்கும் இடம் கிடையாது. அது தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுத இருக்கிறோம். உடனடியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக உள்துறை விவகாரத்தில் தலையிட வேண்டுமெனக் கேட்டிருக்கிறோம். மேலும், கவர்நருடய பாதுகாப்பில் ஏன் இவ்வளவு அலட்சியம் என உயர் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க வேண்டும்" எனவும் கூறியிருந்தார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism