Election bannerElection banner
Published:Updated:

`சிலரைக் கட்டாயப்படுத்தி கட்சி தொடங்கவைக்கின்றனர்; மிஷன் 200!’ - நிர்வாகிகள் கூட்டத்தில் ஸ்டாலின்

ஸ்டாலின்
ஸ்டாலின்

`தி.மு.க வெற்றி பெறும், ஆனால் அந்த வெற்றியை எளிதில் பெற விட மாட்டார்கள்!’ - தி.மு.க தலைவர் ஸ்டாலின்

அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி தி.மு.க தலைவர் ஸ்டாலின், இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என அக்கட்சி அறிவித்திருந்தது. இந்தநிலையில் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

அறிவாலயம் - கூட்டம்
அறிவாலயம் - கூட்டம்

இந்தக் கூட்டத்தில் பேசிய தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், ``இந்தக் கூட்டத்தின் இறுதியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு போர்க்குரலை அறிவிக்கவிருக்கிறார். அதை ஏற்று களத்தைச் சந்திக்கத் தயாராகுங்கள். தி.மு.க தலைவர் ஸ்டாலின் வரும் 23-ம் தேதி முதல் ஜனவரி 10 -ம் தேதி வரை நேரடித் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். தமிழகம் முழுவதும் டிசம்பர் 23-ம் தேதி முதல் ஜனவரி 10-ம் தேதி வரை சுமார் 16,000 கிராம சபைக் கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது” என்று அறிவித்தார்.

தோல்வியில் தொடங்கிய ஸ்டாலின் Vs வெற்றியில் தொடங்கிய பழனிசாமி! - முதல்வர் வேட்பாளர்கள் ஒரு பார்வை

மேலும், `அ.தி.மு.க-வை நிராகரிக்கிறோம்’ என்று கிராமம்தோறும் தீர்மானம் நிறைவேற்ற தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆன்லைனில் தீர்மானம் நிறைவேற்ற வலைதளப் பக்கத்தை அறிமுகப்படுத்தினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து `அ.தி.மு.க-வை நிராகரிக்கிறோம்’ என்ற பெயரில் தி.மு.க-வின் தேர்தல் பரப்புரை வீடியோவும் வெளியிடப்பட்டது

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

தொடர்ந்து இறுதியாகப் பேசிய ஸ்டாலின், ``முக்கிய காலகட்டத்தில் இந்த ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். தமிழகத்தில் கழக ஆட்சி அமைய வேண்டும் என்பதே நமது கொள்கை. தேர்தல் முன்கூட்டியே வருவதாக ஒரு தகவலும் வருகிறது. தேர்தல் எப்போது நடைபெற்றாலும், நாம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பணியாற்ற வேண்டும்.

வரும் தேர்தலில் அ.தி.மு.க அமைச்சர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும். 117 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும், ஆனால், அதற்காக நாம் கட்சி நடத்தவில்லை. 200 தொகுதிகளுக்கு மேல் வெல்ல வேண்டியது நமது இலக்காத இருக்க வேண்டும். தி.மு.க-வைத் தோற்கடிப்பதற்காகச் சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்கவைக்கின்றனர். தி.மு.க வெற்றி பெறும். ஆனால், அந்த வெற்றியை எளிதில் பெற விட மாட்டார்கள்.

`சிலரைக் கட்டாயப்படுத்தி கட்சி தொடங்கவைக்கின்றனர்; மிஷன் 200!’ - நிர்வாகிகள் கூட்டத்தில் ஸ்டாலின்

கிராமசபைக் கூட்டங்கள் முடிந்ததும் ஜனவரியிலிருந்து நேரடியான பரப்புரையில் ஈடுபடுவேன். அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவிருக்கிறேன்” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு