Published:Updated:

அண்ணாவை 'ஹைலைட்' செய்ய விரும்பும் ஸ்டாலின்... பின்னணி என்ன?

முதல்வர் ஸ்டாலின்
News
முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அண்ணாவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறாரா, அரசியல்ரீதியாகத் தன்னை அண்ணாவின் வாரிசாக ஸ்டாலின் காட்டிக்கொள்ள நினைக்கிறாரா?

`` `மக்களிடம் செல், மக்களோடு மக்களாகச் சேர்ந்து வாழ், மக்களுக்குப் பணியாற்று’ என்ற அறிவுரையை எப்போதும் அறிஞர் அண்ணா வழங்குவார். அவர் தந்த அறிவுரைப்படி இந்த ஆட்சி பீடு நடைபோடும். அவ்வாறுதான் அண்ணா இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில் கையெழுத்திட்டேன்.''

கடந்த புதன்கிழமை, காஞ்சிபுரத்தில் அண்ணா இல்லத்துக்கு வெளியே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த வார்த்தைகள் இவை. முதல்வரான பிறகு முதன்முறையாக காஞ்சிபுரத்திலுள்ள அறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்துக்குச் சென்ற ஸ்டாலின், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின்,

கலைஞர் - அண்ணா
கலைஞர் - அண்ணா

``காஞ்புரத்தில் அறிஞர் அண்ணாவில் இல்லத்தில் அவரிடம் வாழ்த்து பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் எண்ணம் நிறைவேறியுள்ளது. எங்களை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா வாழ்ந்த இல்லத்துக்கு வருகை புரிந்தது மகிழ்ச்சியளிக்கிறது. நிதிநிலை அறிக்கை வெளியிடும்போது அதில் அண்ணாவின் பெயரிலும் திட்டங்கள் தொடங்கப்படும்’’ என்றும் தெரிவித்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடரின் கடைசிநாளில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, ``எங்களின் ஆட்சி நீதிக்கட்சியின் தொடர்ச்சி என்பதைப் பெருமையுடன் கூறுகிறேன். நீதிக்கட்சியின் தொடர்ச்சி அண்ணா. அண்ணாவின் தொடர்ச்சி கருணாநிதி. கருணாநிதியின் தொடர்ச்சி நான், இந்த அரசு'' என்றவர் இறுதியாக,

``பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் கடந்த இரு தினங்களாக சட்டப்பேரவையில் பல்வேறு பிரச்னைகள் குறித்து உரையாற்றினார்கள். அதை அரசுக்கு அவர்கள் கூறிய ஆலோசனைகளாகவே எடுத்துக்கொள்கிறேன். ஏனெனில், நான் அண்ணாவின் அரசியல் வாரிசு. கருணாநிதியின் கொள்கை வாரிசு'' என்றார்.

சட்டமன்றம்
சட்டமன்றம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அண்ணாவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறாரா, அரசியல்ரீதியாகத் தன்னை அண்ணாவின் வாரிசாகக் காட்டிக்கொள்ள நினைக்கிறாரா?

தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.

`எங்கள் தலைவரின் ஐம்பதாண்டுக்கால பொது வாழ்க்கையை முன்னிட்டும், திமுக-வின் செயல்தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவையொட்டி தனியார் இதழில் அவரின் நேர்காணல் வெளியானது. அதில், `மதம் சார்ந்த விஷயங்களை அணுகுவதில் உங்கள் தந்தை பெரியார் பாதையைத் தேர்தெடுத்தார், உங்கள் பாதை அண்ணா பாதையா, பெரியார் பாதையா?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, 'என் பாதை அண்ணா பாதை' என்றார் தலைவர் ஸ்டாலின். அந்த விஷயத்தில் மட்டுமல்ல, அனைத்துச் செயல்பாடுகளிலும் எங்கள் தலைவர் அண்ணாவைத்தான் தனக்கான ரோல் மாடலாக நினைக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அண்ணாவின் பாதையும் கலைஞரின் பாதையும் வேறு வேறல்ல. அண்ணாவின் கனவுகளைத்தான் கலைஞர் தன் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றினார். உதாரணமாக, 1968-ல் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் பிரெஞ்ச் ஆராய்ச்சி நிறுவனம்போல, தமிழுக்கு ஓர் ஆராய்ச்சி நிறுவனம் கொண்டு வர வேண்டும் என்பது என் விருப்பம் என அண்ணா பேசினார். அதை, தலைவர் கலைஞர் 1970-ல் நிறைவேற்றினார். அண்ணாவின் தொடர்ச்சியாகத்தான் கலைஞர் இருந்தார். ஆனால், கட்டுப்பாடு மீறல் போன்ற விஷயங்களில் அண்ணா மிகவும் கறாராக இருப்பார். கலைஞர் கொஞ்சம் விட்டுப் பிடிப்பார். நிர்வாகத்தில் எங்கள் தலைவர் அண்ணாவின் வழியைத்தான் கடைப்பிடிக்க நினைக்கிறார்'' என்கிறார் அவர்.

கருணாநிதி
கருணாநிதி

அரசியல் விமர்சகர்கள் இது குறித்துப் பேசும்போது,

``கருணாநிதி தமிழகத்துக்கு பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்திருந்தாலும், அவர்மீது பல விமர்சனங்களும் உண்டு. தமிழ்நாட்டில் அனைவருக்குமான தலைவராக கருணாநிதி இருந்தாரா என்பது சந்தேகம்தான். அவர் மறைந்த பிறகு ஒரு வெற்றிடத்தை தமிழகம் உணர்ந்தபோதும், அவர் வாழ்ந்த காலத்தில் மிகக் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்திருக்கிறார். ஆனால், அண்ணா அப்படியல்ல. அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைவர். அவரை முன்னிறுத்தும்போது அனைவருக்குமான தலைவராக வர முடியும் என ஸ்டாலின் நினைக்கிறார். சமூகநீதி சார்ந்து கலைஞர் எடுத்த பல நடவடிக்கைகளாலும் அவருக்கு அரசியல் எதிரிகள் உண்டு. ஆனால், கருணாநிதிக்கு இருந்த பல சவால்கள் ஸ்டாலினுக்குக் கிடையாது. அனைவரையும் ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்பு ஸ்டாலினுக்கு அமைந்திருக்கிறது. தவிர, தன் தந்தையைவிட அண்ணாவை முன்னிறுத்துகிறார் ஸ்டாலின் என்கிற நற்பெயரும் கிடைக்கும்'' என்கிறார்கள்.