Published:Updated:

``முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மாடல் தான் திராவிட மாடல்" - தேனியில் முதல்வர் ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

``முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என ஒரு மகனா இருந்து அறிவிப்பது பெருமையாக இருக்கிறது” - ஸ்டாலின்

``முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மாடல் தான் திராவிட மாடல்" - தேனியில் முதல்வர் ஸ்டாலின்

``முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என ஒரு மகனா இருந்து அறிவிப்பது பெருமையாக இருக்கிறது” - ஸ்டாலின்

Published:Updated:
மு.க.ஸ்டாலின்

தேனியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவுற்ற பணிகள், புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதற்காக நேற்று இரவு மதுரை விமான நிலையம் வந்து காரில் மதுரையிருந்து தேனி வந்தார். ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையான வைகை இல்லத்தில் தங்கினார். காலை நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். விழா மேடை அருகே அமைக்கப்பட்டிருந்த தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம் சார்பாக வைக்கப்பட்ட கண்காட்சியை பார்வையிட்ட பின்பு மேடைக்கு கீழ் அமர்ந்திருந்த பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைகளுக்கு இடையே நடந்து சென்று அவர்களிடம் மனுக்களை பெற்றார்.

மக்களைச் சந்தித்த முதல்வர்
மக்களைச் சந்தித்த முதல்வர்

இவ்விழாவில் தேனி மாவட்டத்தில் சுமார் 114 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், சுமார் 74.21 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டங்களுக்கான அடிக்கலும் நாட்டினார். மேலும் சுமார் 71.4 கோடி ரூபாய் மதிப்பில் 10,427 பயனாளிகளுக்கு பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 259.82 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழக முதல்வர்
தமிழக முதல்வர்

நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசுகையில், `நான் முதல்வராக பொறுப்பேற்ற வரும் 7-ம் தேதி ரோடு ஓராண்டு நிறைவடைய போகிறது. தேனி மாவட்டம் தலை சிறந்த மாவட்டம். தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை, மேற்கு தொடர்ச்சி மலை கண்ணகி கோவில்’ என மாவட்டத்தின் சிறப்புகள் குறித்து பேசினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து பேசிய அவர், ``தேனி மாவட்டத்தில் தோட்டக்கலைதுறை கல்லூரி, ஆட்சியர் அலுவலகம், உழவர் சந்தை போன்று மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் தேனி மாவட்டத்திற்கு திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது திராவிட மாடல் தான் நடந்து கொண்டிருக்கிறது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மாடல் தான் திராவிட மாடல். மக்களுக்கான திட்டங்களை அவர்களுக்கு உண்மையில் கொண்டு சேர்ப்பதே திராவிட மாடல். அரசின் திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் விருப்பமாகும்.

நலத்திட்டம் வழங்கல்
நலத்திட்டம் வழங்கல்

மேலும் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அரசு மருத்துவமனை 8 கோடி ரூபாய், உத்தமபாளையம் அரசு மருத்துவமனை 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும். ஆண்டிபட்டி ஜவுளி பூங்கா செயல்படுத்த படும், கம்பம் பகுதியில் உயர்தர நெல் அரிசி ஆலை நிறுவப்படும். தஞ்சையில் நடந்த எதிர்பாராத விபத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி வந்தேன். அதனைத் தொடர்ந்து சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்றேன். பின் தற்போது தேனியில் அரசு விழா மற்றும் மாலையில் திண்டுக்கல் அரசு விழாவில் பங்கேற்க இருக்கிறேன். இப்படி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஓயாமல் உழைத்து வருகிறேன். ‌ ‌

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடிகாரம் ஓடும் முள் ஓடும் என்ற பாரதிதாசன் வரிகளுக்கு ஏற்ப உழைத்து கொண்டிருக்கிறேன். கலைஞர் கருணாநிதி சொன்னது போல ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்பதற்கு ஏற்ப உழைத்து கொண்டிருக்கின்றேன். அதற்கு காரணம் கலைஞர் தான்.

நலத்திட்டம் வழங்கல்
நலத்திட்டம் வழங்கல்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என ஒரு மகனா இருந்து அறிவிப்பது பெருமையாக இருக்கிறது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய போது பாஜக உள்பட அனைத்து கட்சியினரும் ஆதரவளித்தனர். ஆனால் ஒரு கட்சி மட்டும் ஆதரவளிக்க இல்லை. அது எந்த கட்சி என நான் சொல்ல விரும்பவில்லை” ‌என்றார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மற்றும் தேனி திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism