Published:Updated:

அதிமுக: `ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்' எனக் குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் கடிதம்!

அதிமுக - இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை விளக்கக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்குத் தேர்தல் ஆணையம் கடிதம்.

அதிமுக: `ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்' எனக் குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் கடிதம்!

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை விளக்கக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்குத் தேர்தல் ஆணையம் கடிதம்.

Published:Updated:
அதிமுக - இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

அத்தியாவசியப் பொருள்களின் விலையுயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்ற முக்கியக் காரணங்களால் பலரும் சொந்த மாநிலத்தைவிட்டு வெளிமாநிலங்களுக்குப் புலம்பெயர் தொழிலாளர்களாகச் செல்கின்றனர். இப்படிச் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களால் தேர்தல்களின்போது சரியாக வாக்களிக்க முடியாத நிலை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. 2019-ம் ஆண்டு லோக் சபா தேர்தலின்போது மொத்தமாகவே 67.4 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகின. 32.6 சதவிகித வாக்குகள் பதிவாகவில்லை. இதற்குப் புலம்பெயர் தொழிலாளர்களும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

வாக்குப்பதிவு இயந்திரம்
வாக்குப்பதிவு இயந்திரம்
Photo: Vikatan

அந்த வரிசையில் புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்திலிருந்தே வாக்களிப்பதற்கு ஏதுவாக ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தலைமைத் தேர்தல் ஆணையம் உருவாக்கியிருக்கிறது. இந்த இயந்திரம் தொடர்பாக செயல்முறை விளக்கம் அளிக்க, தேர்தலை ஆணையம் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துவருகிறது.

இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்
இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

அந்த வகையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அ.தி.மு.க-வுக்கு அனுப்பியிருக்கும் கடிதம் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனுப்பியிருக்கும் இந்தக் கடிதத்தில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு கடிதம்
மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு கடிதம்

ஏற்கெனவே அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வரவு-செலவு கணக்கை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதும், சட்டத்துறை ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எனக் கடிதம் அனுப்பியிருந்ததும் பேசுபொருளாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.