Published:Updated:

``பெட்ரோல், டீசல்... ஜிஎஸ்டி-க்குக் கீழ் கொண்டுவரத் தயார்; மாநிலங்கள் தயாராக இல்லை”- மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ( ட்விட்டர் )

``எரிபொருள்துறையில் மத்திய அரசு அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. மாநிலங்களும் இனி அவற்றின் பொறுப்பை ஏற்க வேண்டும்." - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி.

``பெட்ரோல், டீசல்... ஜிஎஸ்டி-க்குக் கீழ் கொண்டுவரத் தயார்; மாநிலங்கள் தயாராக இல்லை”- மத்திய அமைச்சர்

``எரிபொருள்துறையில் மத்திய அரசு அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. மாநிலங்களும் இனி அவற்றின் பொறுப்பை ஏற்க வேண்டும்." - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி.

Published:Updated:
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ( ட்விட்டர் )

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ``நாட்டில் தற்போது அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கு, கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்திருக்கிறது. மாநில அரசுகளும் இதேபோல பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க வேண்டும்" எனப் பேசினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரதமரின் இந்தப் பேச்சுக்குப் பல மாநில முதல்வர்கள் தொடர்ந்து பதிலளித்துவந்தனர். இந்த நிலையில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ``பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களை பெட்ரோல் மற்றும் டீசல் மீது பா.ஜ.க ஆளும் மாநிலங்களுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட இரு மடங்கு வாட் வரி வசூலிக்கின்றன. அதாவது பா.ஜ.க அல்லாத மாநிலங்கள் வசூலிக்கிற வாட் வரியில் பாதியை பா.ஜ.க மாநிலங்கள் வசூலிக்கின்றன. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெட்ரோல்
பெட்ரோல்

அதனால் பா.ஜ.க மற்றும் பா.ஜ.க அல்லாத மாநிலங்களுக்கு இடையே பெட்ரோல் சில்லறை விநியோக விலையில் ரூ.15 முதல் ரூ.20 வரை வித்தியாசம் உள்ளது. எரிபொருள்துறையில் மத்திய அரசு தனது பொறுப்பை ஏற்றுள்ளது.

எனவே, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரம் இது. நாங்கள் இன்னும் முழுமையாக கொரோனா பாதிப்பிலிருந்து மீளவில்லை. இன்னும் 80 கோடி மக்களுக்கு உணவளிக்கிறோம் மற்றும் தடுப்பூசிகள் விஷயத்தை கவனித்துவருகிறோம். 

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
ட்விட்டர்

உக்ரைனில் போர் நடவடிக்கையிலிருந்தது எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு  $19.56 டாலரிலிருந்து $130 டாலராக உயர்ந்துள்ளது. மத்திய அரசும் பெட்ரோல், டீசல் மீது ரூ.32 கலால் வசூலித்தது.

ஆனால், கடந்த தீபாவளிக்கு முன்பு நாங்கள் அதைக் குறைத்தோம். அதனால் கட்டணங்கள் குறைந்துவிட்டன. எரிபொருள்துறையில் மத்திய அரசு அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. மாநிலங்களும் இனி அவற்றின் பொறுப்பை ஏற்க வேண்டும்" என்று கூறினார்.

மேலும் அவர், ``பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அதை, ஜி.எஸ்.டி-க்கு கீழ் கொண்டுவர மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஆனால் மாநிலங்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதுதான் உண்மை” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism