Published:Updated:

உ.பி -7, குஜராத் - 3, 11 பெண்கள், 8 பழங்குடியினர் - மோடி அமைச்சரவை 2.0 -வில் மொத்தம் எத்தனை பேர்?!

மோடி அமைச்சரவை  2.0
மோடி அமைச்சரவை 2.0

உ.பி -7, குஜராத் - 3; 11 பெண்கள், 8 பழங்குடியினர் - மோடி அமைச்சரவை 2.0 எப்படியிருக்கிறது?

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 43 பேருக்கு அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டு, அவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவர் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகன் இணையமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். 2019-ம் ஆண்டு, இரண்டாவது முறையாக வெற்றிபெற்று பிரதமரானார் மோடி. அப்போது அவர் தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் சில பல மாற்றங்கள் செய்யப்பட்டு, தற்போது புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டிருக்கிறது.

மோடி அமைச்சரவை 2.0 குறித்த புள்ளிவிவரங்களை அலசுவதுதான் இந்தக் கட்டுரை!

மோடியுடன் எல்.முருகன்
மோடியுடன் எல்.முருகன்
Vikatan

புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட 43 அமைச்சர்களில், 36 பேர் புதுமுகங்கள். இந்த 36 பேரில் ஏழு பேர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். மேற்கு வங்கம், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா நான்கு பேருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. குஜராத்தைச் சேர்ந்த மூன்று பேர் அமைச்சர்களாக்கப்பட்டிருக்கின்றனர். மத்தியப் பிரதேசம், ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா இரண்டு பேருக்கும், தமிழ்நாடு, ராஜஸ்தான், அஸ்ஸாம், மணிப்பூர், திரிபுரா, உத்தரகாண்ட், டெல்லி, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒருவருக்கும் மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

மோடியின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவர்களில், நான்கு பேர் முன்னாள் முதலமைச்சர்கள்!

புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர், மத்திய அமைச்சரவையில் மோடி உட்பட மொத்தம் 78 பேர் இருக்கின்றனர். இவர்களில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர் என அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

மோடி
மோடி

மோடியின் தற்போதைய அமைச்சரவையில், 27 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பழங்குடியினர் எட்டுப் பேரும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 12 பேரும், சிறுபான்மையினர் ஐந்து பேரும் மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கின்றனர். சிறுபான்மையினரில் புத்த மதத்தைச் சேர்ந்த இரண்டு பேர் இடம்பெற்றிருக்கின்றனர். கிறிஸ்தவ மதம், இஸ்லாமிய மதம், சீக்கிய மதம் ஆகிய மதங்களைச் சேர்ந்த தலா ஒருவர் இடம்பெற்றிருக்கின்றனர்.

அமைச்சரவையில் பெண்கள்..!
மோடி அமைச்சரவை 2.0-வில் இடம்பெற்றிருக்கும் பெண்களின் எண்ணிக்கை 11.
பெண் அமைச்சர்கள்
பெண் அமைச்சர்கள்
`ஹெச்.ராஜாவைப் பார்த்து  மாநிலத் தலைமை பயப்படுகிறது!’ - கொதிக்கும் முன்னாள் பா.ஜ.க நிர்வாகி

மத்திய அமைச்சரவையில் 13 வழக்குரைஞர்கள், ஆறு மருத்துவர்கள், ஐந்து பொறியாளர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். 50 வயதுக்குள் இருக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கை 14. மத்திய அமைச்சரவையின் சராசரி வயது 58.

மோடியின் அமைச்சரவையில் பெண்களுக்கும், சிறுபான்மையினருக்கும், தாழப்பட்டவர்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருப்பதற்குப் பாராட்டுகள் குவிந்துவரும் அதேவேளையில், அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் உத்தரப்பிரதேசத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருப்பதற்கு விமர்சனங்களும் எழுந்துவருகின்றன.

மோடி அமைச்சரவை 2.0 பற்றிய உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பதிவிடுங்கள்!
அடுத்த கட்டுரைக்கு