Published:Updated:

பெரியார் சிலை... `கடவுள் இல்லை' வாசகம்... தொடுக்கப்பட்ட வழக்கு - ஆதரவும் எதிர்ப்பும்!

பெரியார் சிலை

`தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு கீழ் கடவுள் இல்லை என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதற்குத் தமிழக அரசும் உதவி புரிகிறது. இந்த வாசகத்தை நீக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.

பெரியார் சிலை... `கடவுள் இல்லை' வாசகம்... தொடுக்கப்பட்ட வழக்கு - ஆதரவும் எதிர்ப்பும்!

`தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு கீழ் கடவுள் இல்லை என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதற்குத் தமிழக அரசும் உதவி புரிகிறது. இந்த வாசகத்தை நீக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.

Published:Updated:
பெரியார் சிலை

தமிழகத்தில் பெரியார் சிலையின் கீழ் எழுதப்பட்டுள்ள கடவுள் இல்லை என்ற வாசகத்தை நீக்க கோரிய மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், `வாசகங்களை நீக்கவேண்டும் என்பது கருத்துரிமைக்கு எதிரான ஒரு செயல்' என பெரியாரியவாதிகளும் `இல்லை, மத நம்பிக்கைக்கு எதிரான விஷயம் அகற்றப்படுவது சரிதான்' என பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பினரும் குரலெழுப்பி வருகின்றனர்.

பெரியார்
பெரியார்

சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் எம்.தெய்வநாயகம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், `தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு கீழ் கடவுள் இல்லை என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதற்குத் தமிழக அரசும் உதவி புரிகிறது. இந்த வாசகத்தை நீக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, இந்த மனுவுக்கு தமிழக அரசு மற்றும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞரும் திராவிட கழக பிரசாரச் செயலாளருமான அருள்மொழியிடம் பேசினோம்... ``பெரியார் சிலை என்பது காலம்காலமாக சிலருக்கு உறுத்தலாக இருக்கக்கூடிய ஒன்று. அதனால்தான் இந்த முயற்சியில் அவர்கள் இறங்கியிருக்கிறார்கள். உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார்கள். அது தள்ளுபடி ஆனதும் தற்போது உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள். நோட்டீஸ் கொடுத்திருபதாலேயே, அப்படியே இந்த விஷயத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு விட்டது என்று கருதமுடியாது. பெரியார் சிலைக்குக்கீழே பெரியாரின் கருத்துகள் இருக்ககூடாது என்று சொல்லும் உரிமை யாருக்கு இருக்கிறது. தவிர, பெரியார் உயிருடன் இருக்கும்போதே அவருக்கு சிலை வைக்க அனுமதி கேட்டபோது அவர் இரண்டு விஷயங்களுக்காகத்தன ஒப்புக்கொண்டார்.

வழக்கறிஞர் அருள்மொழி
வழக்கறிஞர் அருள்மொழி

ஒன்று, உயிரோடு இருக்கும்போது சிலைவைத்தால் அவர்கள் சீக்கிரம் இறந்துவிடுவார்கள் என்கிற மூட நம்பிக்கை இருந்தது. அதை உடைக்கவேண்டும். அடுத்ததாக, அது புகழ்ச்சிக்காக இருக்கக்கூடாது என்பதால்தான், சிலைக்குக்கீழே கடவுள் இல்லை என்கிற வாசகம் பதிக்கவேண்டும் என்றார். இந்த வாசகங்களை எடுத்துவிட்டால், ராமசாமி சித்தர் என்றோ, ராமசாமி ஆழ்வார் என்றோ, நாயன்மார் என்றோ பட்டம் வைக்கவாய்ப்பிருக்கிறது. அந்தச் சிலைக்கு முதன்மையான விஷயமே அந்தக் கருத்துகள்தான். அடக்குமுறையைக்கொண்டு, ஒரு கருத்தை அழிக்க நினைக்கும் உக்தி தோற்றுப்போனதாகத்தான் வரலாற்றில் இருக்கிறது. தற்போது மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் தைரியமும், நீதிமன்றங்களை மிரட்டிப் பணிய வைக்கலாம் என்கிற எண்ணமும்தான் அவர்களை இதுபோன்ற செயல்களில் ஈடுபட வைக்கிறது.'' என்றார்.

பா.ஜ.க மாநிலத் துணைத்தலைவர், நாராயணன் திருப்பதியிடம் இதுகுறித்துப் பேசினோம்... ``இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பது உண்மையானால், எந்தவொரு மதம் குறித்தும் தவறான கருத்துகளைத் தெரிவிப்பது, மத நம்பிக்கைகளை துவேஷம் செய்வது, மத கோட்பாடுகளை, வழிபாடுகளை நிந்தனை செய்வதை எல்லாம் மதச்சார்பற்ற அரசு என்று சொல்லிக்கொள்பவர்கள் தடுக்கவேண்டும். ஆனால், இங்கு பெரும்பான்மை சமுதாயமான இந்துக்களின் வழிபாட்டுமுறையை ஆபாசமாக, அநாகரிகமாக விமர்சிப்பது, அதற்கு எதிர்வினையாக மற்ற மதங்களை விமர்சனம் செய்தால் அதற்கு மட்டும் பொங்கி எழும் அரசியல்வாதிகளைத்தான் பார்க்கிறோம்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

உண்மையில் இதற்குப்பெயர்தான் மதவாதம். கடவுள் இல்லை என்ற வாசகத்தோடு சிலையை, சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத்தலத்தின் முன் வைக்கும் தைரியம் அவர்களுக்கு இருக்கிறதா என்பதுதான் எங்களின் கேள்வி. நம்பிக்கையோடு கோவிலுக்குச் செல்லும் பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் நோக்கில்தான் இதுபோன்ற வாசகங்களுடன் சிலைகள் வைக்கப்படுகின்றன. அதை எதிர்த்துதான் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது'' என்கிறார் அவர்.