Published:Updated:

நள்ளிரவில் சி.வி.சண்முகத்தைக் கைதுசெய்ய நடவடிக்கையா?! - குவிந்த தொண்டர்கள்... நடந்தது என்ன?

தொண்டர்களுடன் சி.வி.சண்முகம்

நேற்று நள்ளிரவு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைதுசெய்யப்படலாம் என வெளியான உறுதிபடுத்தப்படாத தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

நள்ளிரவில் சி.வி.சண்முகத்தைக் கைதுசெய்ய நடவடிக்கையா?! - குவிந்த தொண்டர்கள்... நடந்தது என்ன?

நேற்று நள்ளிரவு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைதுசெய்யப்படலாம் என வெளியான உறுதிபடுத்தப்படாத தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

Published:Updated:
தொண்டர்களுடன் சி.வி.சண்முகம்

அண்மை மாதங்களாக, அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள்மீது மேற்கொள்ளப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகி, அதிர்வலைகளை ஏற்படுத்திவருகின்றன. அண்மையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கைதுசெய்யப்பட்ட சம்பவம், அதிமுக-வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (28.02.2022) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக-வின் முக்கியத் தலைவர்களால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நள்ளிரவில் குவிந்த அதிமுக தொண்டர்கள்
நள்ளிரவில் குவிந்த அதிமுக தொண்டர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதன்படி விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்குத் தலைமை தாங்கிப் பேசியிருந்தார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். அப்போது, ``கைதுக்காக அதிமுக இந்த ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. கைதுசெய்வதை எண்ணி அதிமுக என்றும் பயப்படாது. சிறை என்பது எங்களுக்குப் புதிதல்ல. உங்கள் பூச்சாண்டியைக் கண்டு அதிமுக-வினர் பயப்பட மாட்டோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அடுத்த குறியாக, சி.வி.சண்முகம்தான் கைதுசெய்யப்படுவார்... என்று செய்திகள் உலாவியதைப் பார்த்தேன். பண்ணிக்கோ... இந்த கைதுக்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை. எப்போது வேண்டுமானாலும் தாராளமாக வரலாம். இரவு 3 மணிக்கு வருவது, விடியற்காலையில் வருவதெல்லாம் வேண்டாம். அப்பாயின்ட்மென்ட் சொல்லிட்டே வரலாம். வேட்டி, சட்டை கட்டி ரெடியாக இருக்கிறோம்" என்று காட்டமாகவும் விரிவாகவும் பேசியிருந்தார் அவர்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

இந்நிலையில், சி.வி.சண்முகம் கைதுசெய்யப்பட்டலாம் என நேற்று இரவு 10 மணிக்கு மேல் உறுதிபடுத்தப்படாத தகவல் ஒன்று வெளியானது. இந்தத் தகவலைக்கொண்டு திண்டிவனத்திலுள்ள சி.வி.சண்முகம் வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் நள்ளிரவில் அடுத்தடுத்து சிறிது நேரத்திலேயே 200-க்கும் மேற்பட்டோர் வந்து சேர்ந்ததால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அரசு ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்துவந்த தீபம்குமார், சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரசு ஒப்பந்தப் பணி செய்த தீபம்குமாரை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஏமாற்றியதாலேயே தற்கொலை செய்துகொண்டதாக, தீபம் குமாரின் சகோதரர் திண்டிவனம் காவல் நிலையத்தில் அளித்ததாகக் கூறப்படும் புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தைக் கைதுசெய்யலாம் என்ற கருத்துகளும் வட்டமடித்தன.

சி.வி.சண்முகம் இல்லம்
சி.வி.சண்முகம் இல்லம்

இந்தப் பதற்றமான சூழலில் சி.வி.சண்முகத்தின் சகோதரர் ராதாகிருஷ்ணன், அங்கு கூடியிருந்த தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து அங்கு வந்த சி.வி.சண்முகம், "ஒன்றுமில்லை கலைந்து செல்லுங்கள். இப்போதெல்லாம் வர மாட்டார்கள்" என்று கூறி, கூட்டத்தைக் கலைந்து செல்லும்படி கூறினார். அதன் தொடர்ச்சியாகக் கூட்டம் மெல்ல மெல்லக் கலைந்து சென்றது. நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் விழுப்புரம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism