Published:Updated:

``டெல்லியில் புல்டோசர் அரசியலை நிறுத்துங்கள்..!" - அமித் ஷாவுக்கு டெல்லி துணை முதல்வர் கடிதம்!

டெல்லி துணை முதல்வர்

``அனுமதியற்ற கட்டடங்களை அகற்றுகிறோம் என்ற பெயரில் டெல்லியை நாசம் செய்கிறார்கள்'' என டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

``டெல்லியில் புல்டோசர் அரசியலை நிறுத்துங்கள்..!" - அமித் ஷாவுக்கு டெல்லி துணை முதல்வர் கடிதம்!

``அனுமதியற்ற கட்டடங்களை அகற்றுகிறோம் என்ற பெயரில் டெல்லியை நாசம் செய்கிறார்கள்'' என டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

Published:Updated:
டெல்லி துணை முதல்வர்

டெல்லியிலுள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் புல்டோசர் கொண்டு அகற்றப்படும் நிலையில், முஸ்லிம் வீடுகள் மட்டும் குறிவைத்து இடிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து, புல்டோசர் அரசியல் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி துணை முதல்வருமான மனிஷ் சிசோடியா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இன்று கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடித்ததில், ``டெல்லியில் புல்டோசர் அரசியலை நிறுத்துங்கள். இந்தச் செயல் தொடர்ந்தால் 60 லட்சம் மக்கள் வீடு இல்லாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். மக்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இது மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆம் ஆத்மி அரசு மக்களுக்குத் துணையாக இருக்கிறது. பா.ஜ.க-வின் இடிப்பு நடவடிக்கையைத் தடுக்க நாங்கள் சிறைக்குச் செல்லவும் தயாராக இருக்கிறோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அமித் ஷா
அமித் ஷா

டெல்லியின் அங்கீகரிக்கப்படாத காலனிகள் மற்றும் சேரிகளில் நடந்த இடிப்புகளுக்கு குடிமை அமைப்புகள் பொறுப்பேற்க வேண்டும். டெல்லி மாநகராட்சியில் 17 ஆண்டுகளாக, பா.ஜ.க தலைவர்கள், கவுன்சிலர்கள், மேயர்கள் ஆகியோர் டெல்லியில் அனுமதியற்ற கட்டுமானங்களைக் கட்டுவதுக்கு அனுமதி கொடுத்துவிட்டு, ஏராளமாகப் பணம் சம்பாதித்துவிட்டனர். தற்போது அனுமதியற்ற கட்டடங்களை அகற்றுகிறோம் என்ற பெயரில் டெல்லியை நாசம் செய்கிறார்கள்.

புல்டோசர் ஓட்டுகிறோம் என்ற பெயரில் இது போன்ற ஆபத்தான அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று பா.ஜ.க தலைவர்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism