Published:Updated:

`புகழ்பாடுவதை நிறுத்துங்கள்’ - ஜெயங்கொண்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்

ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம்

முதல் கூட்டத்திலேயே அதிமுக கவுன்சிலர்களை சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகக் காக்கவைத்து கூட்டத்தை நடத்தியதாகக் குற்றசாட்டு எழுந்திருக்கிறது.

``உங்க தலைவர்களோட புகழ்பாடுவதை நிறுத்திவிட்டு அடுத்தவர்களைப் பேசவிடுங்கள்" என்று திமுக - அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் ஜெயங்கொண்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`புகழ்பாடுவதை நிறுத்துங்கள்’ - ஜெயங்கொண்டத்தில் திமுக,  அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற முதல் கூட்டம் நடைபெற்றது. மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து அதிமுக 1-வது வார்டு கவுன்சிலர் தங்கபாண்டியன் பேசினார். அப்போது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகிய தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, குறுக்கிட்ட 12-வது வார்டு திமுக கவுன்சிலர் அம்பிகாபதி என்பவர், ``அதிமுக தலைவர்களின் புகழ்பாடுவதை நிறுத்திவிட்டு அடுத்தவங்களைப் பேச சொல்லுங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது புகழ்பாடும் இடம் கிடையாது” என்றார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் 4-வது வார்டு அதிமுக கவுன்சிலர் செல்வராஜ் உள்ளிட்ட அதிமுக கவுன்சிலர்கள் திமுக கவுன்சிலர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஜெயங்கொண்டம் நகராட்சி
ஜெயங்கொண்டம் நகராட்சி

அப்போது ஜெயங்கொண்டம் நகர மன்ற துணைத் தலைவர் கருணாநிதி சமரசம் செய்ததை அடுத்து அமைதியாகினர். முதல் கூட்டத்திலேயே அ.தி.மு.க கவுன்சிலர்களை சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகக் காக்கவைத்து, கூட்டத்தை தாமதமாக நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் திமுக கவுன்சிலர், அதிமுக கவுன்சிலரைப் பேசவிடாமல் தடுத்ததாகவும் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.