Published:Updated:

தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்த தீவிரம் காட்டுகிறதா தேசியத் தலைமை?! - ஓர் அலசல்

மோடி, ஜே.பி.நட்டா, அமித் ஷா

``இன்னும் இரண்டு ஆண்டுகளில் யாரும் எதிர்பார்த்திராத அளவுக்கு தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி இருக்கும்'' என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில்.

தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்த தீவிரம் காட்டுகிறதா தேசியத் தலைமை?! - ஓர் அலசல்

``இன்னும் இரண்டு ஆண்டுகளில் யாரும் எதிர்பார்த்திராத அளவுக்கு தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி இருக்கும்'' என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில்.

Published:Updated:
மோடி, ஜே.பி.நட்டா, அமித் ஷா

ஆளும் திமுக அரசின் மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான விமர்சனங்களை ஒருபுறம் வைத்துவரும் நிலையில், ``கட்சியை வலுப்படுத்துவதற்கான வேலைகளும் தீவிரமடைந்து வருகின்றன. டெல்லி பாஜக தலைமையின் முழு கவனமும் தற்போது தமிழகத்தின் மீதுதான் இருக்கிறது, 2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் கட்சியை வெற்றிபெறச் செய்வதற்கு பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இன்னும் இரண்டு ஆண்டுகளில் யாரும் எதிர்பார்த்திராத அளவுக்கு தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி இருக்கும்'' என பொடிவைத்துப் பேசுகிறார்கள் கமலாலய வட்டாரத்தில்.

அண்ணாமலை - பாஜக
அண்ணாமலை - பாஜக

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக திமுக, அதிமுக நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கியதுபோல பாஜகவிலும் நிர்வாகிகள் நீக்கப்பட்டனர். தவிர, திருநெல்வேலி, நாகப்பட்டினம், சென்னை மேற்கு, வட சென்னை மேற்கு, கோயம்புத்தூர் நகர், புதுக்கோட்டை, ஈரோடு வடக்கு, திருவண்ணாமலை வடக்கு ஆகிய 8 கட்சி மாவட்டங்களை சீரமைக்கும் வகையில் மாவட்டத் தலைவர், நிர்வாகிகள், அணிகள், பிரிவுகள், மண்டல் கமிட்டிகள் அனைத்தும் முழுமையாக கலைக்கப்பட்டன. தற்போது, மேலும் சில மாவட்டங்களை கலைக்கவிருப்பதாகவும் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து நம்மிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ஒருவர்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``டெல்லி பாஜக தலைமையின் கவனம் முழுவதும் இப்போது தென்னிந்தியாவின் மீதுதான் இருக்கிறது. அதிலும் தமிழகத்தில் எப்படியாவது கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதில் மோடியும் அமித் ஷாவும் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள். அதனால், கட்சியின் நிர்வாகம் சார்ந்த என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என மாநிலத் தலைவருக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். கடந்த 23-ம் தேதி டெல்லியில் கட்சியின் முன்னணித் தலைவர்கள் சிலரையும் அமைச்சர்கள் சிலரையும் அண்ணாமலை சந்தித்துப் பேசினார். ஏற்கெனவே சில மாவட்டங்களில் நிர்வாகிகள் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சில நாள்களில் மேலும் சில மாவட்டங்களில் நிர்வாகிகள் மாற்றம் இருக்கும். அதற்கான தகவலை டெல்லி தலைமையிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லிவிட்டார் அண்ணாமலை.

அண்ணாமலை - நரேந்திர மோடி
அண்ணாமலை - நரேந்திர மோடி

தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் மிகப் பிரமாண்டமாக கட்சி அலுவலகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி, திருப்பத்தூர்(வேலூர்) மாவட்டங்களுக்கான கட்டடங்களை நட்டா திறந்துவைத்தார். பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தற்போது புதிய கட்டடத்துக்கான பணிகள் நடந்து வருகின்றன. தவிர, கீழ்மட்ட அளவில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஊராட்சி, பேரூராட்சிகளுக்கு தலைவர்கள் நியமிக்க இருக்கிறோம். தேர்தல் நேரத்தில் பூத்துக்கு ஆள்களைத் தேடிக்கொண்டிருப்பதற்கு பதிலாக, கிளை அளவில், மாநகரங்கள் என்றால் வட்ட அளவில் கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலைகளை மிகத் தீவிரமாகவே செய்துவருகிறோம். எங்கள் தலைவரும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார். அதேவேளையில், மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்குத்தான் முன்னிரிமை கொடுத்து வருகிறோம்.

பொதுவான பிரச்னைகளை முன்னிறுத்தி கூட்டங்கள் நடத்தும்போது, நாங்கள் எதிர்பார்ப்பதைவிட அதிகமான மக்கள் கூட்டத்தைப் பார்க்கமுடிகிறது. இது பொதுவான எங்கள் கட்சியின் மீதிருக்கும் விமர்சனங்களைத் தவிடு பொடியாக்குவதோடு, எங்கள் நிர்வாகிகளுக்கே புதிய உற்சாகத்தைக் கொடுக்கிறது. தமிழக மக்கள் இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் வாக்குகளை வாரி வழங்குவதற்கு அவர்கள் கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களும் ஒரு காரணம். ஆனால், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் விழிப்புணர்வு இல்லை. அதனால், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் பிரசாரங்களையும் மத்திய அமைச்சர்கள், முக்கியத் தலைவர்களை வைத்து மேற்கொள்ள இருக்கிறோம். தவிர, எங்கள் கட்சியின் சார்பில் வெற்றி பெற்றிருக்கும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் இது தொடர்பாக ஆலோசனைகளை வழங்கிவருகிறோம். இது நிச்சயமாக எங்களுக்கு மிகபெரிய அளவில் கைகொடுக்கும் என நம்புகிறோம்.

பாஜக
பாஜக

இது எல்லாவற்றையும்விட நாங்கள் மிகமுக்கியமாகக் கையிலெடுத்திருக்கும் ஒரு விஷயம் என்பது, ஆளும் திமுகவை பலவீனப்படுத்துவதுதான். அதற்காக எங்களிடம் பல அஸ்திரங்கள் கைவசம் இருக்கின்றன. தற்போது நாங்கள் வெளியிட்டிருக்கும் விஷயங்கள் எல்லாம் வெறும் சாம்பிள்கள்தான். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, அவர்கள் குறித்து அதிமுக என்ன சொல்கிறது என்பதைவிட நாங்கள் சொல்லும் விஷயங்கள்தான் பேசுபொருளாக இருக்கிறது. அவர்களின் ஊழல், முறைகேடான காண்ட்ராக்ட்கள் குறித்து நாங்கள் சொல்லும் விஷயங்கள் நன்றாக எடுபடுகின்றன. முதல்வரின் துபாய் பயணம், பிஜிஆர் விவகாரம் குறித்து நாங்கள் கையிலெடுத்திருக்கும் விஷயங்கள் நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகளவுக்கு ரீச் ஆகியிருக்கிறது.

ஒருபுறம் திமுகவின்மீது தாக்குதல்களைத் தொடுத்து அவர்களை நிலைகுலையச் செய்துகொண்டே மறுபுறம் எங்கள் கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்திக்கொண்டே வருவதுதான் எங்கள் திட்டம். மாற்றுக் கட்சிகளில் அதிருப்தியாக இருக்கும் பல நிர்வாகிகளையும் எங்கள் கட்சியில் இணைத்து வருகிறோம். நிச்சயமாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில், இருபதுக்கும் மேற்பட்ட இடங்களைப் பிடிப்பதோடு, 2026 தேர்தலில் தமிழகத்தின் எதிர்க்கட்சியாக அமர்வதுதான் எங்களின் இலக்கு'' என்கிறார்கள்.