Published:Updated:

``விளவங்கோடு தொகுதிக்காக என்னை ஓரம்கட்டுகிறார்!''- அ.தி.மு.க மா.செ-க்கு எதிராகக் கொதிக்கும் நிர்வாகி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் ஜான் தங்கம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் ஜான் தங்கம்

"2021 சட்டசபைத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிடுவதற்காக, ஏற்கெனவே போட்டியிட்ட என்னைக் கட்சியிலிருந்து ஓரம்கட்டுகிறார். என்னைக் கட்சியிலிருந்து நீக்கினால் அந்தத் தொகுதி தனக்குக் கிடைக்கும் என்ற ஆசையில் மாவட்டச் செயலாளர் ஜான் தங்கம் இப்படி நடந்துகொள்கிறார்."

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பதவியில் இருந்து கடந்த 2-ம் தேதி நீக்கப்பட்டிருக்கிறார் நாஞ்சில் டொமினிக்.

''2016 சட்டசபைத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்ட என்னைக் கட்சியிலிருந்து நீக்கினால் அந்தத் தொகுதி தனக்குக் கிடைக்கும் என்ற ஆசையில் மாவட்டச் செயலாளர் இப்படி நடந்துகொள்கிறார்'' எனக் கொதிக்கிறார் நாஞ்சில் டொமினிக்.

நாஞ்சில் டொமினிக்
நாஞ்சில் டொமினிக்

இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், "கல்குளம் விளவங்கோடு தாலுகா வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் பதவிக்கு நான் போட்டியிட்டபோது என்னை தோற்கடிக்க மாவட்டச் செயலாளர் ஜான் தங்கம் பல முயற்சிகள் செய்தார். அதையும் மீறி நான் தலைவர் ஆனேன். இப்போது என்னைத் தலைவர் பதவியிலிருந்து மாற்றுவதற்காக சில இயக்குநர்களை வைத்து வழக்கு பதிவு செய்ய வைக்கிறார்.

அதுமட்டுமல்லாது, 2021 சட்டசபைத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிடுவதற்காக, ஏற்கெனவே போட்டியிட்ட என்னைக் கட்சியில் இருந்து ஓரம்கட்டுகிறார். என்னைக் கட்சியிலிருந்து நீக்கினால் அந்தத் தொகுதி தனக்குக் கிடைக்கும் என்ற ஆசையில் மாவட்டச் செயலாளர் ஜான் தங்கம் இப்படி நடந்துகொள்கிறார். இவர் மாவட்டச் செயலாளராக வந்த பிறகு எல்லா தேர்தலிலும் தோல்விதான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளரான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு இவர் ஒத்துழைக்கவில்லை. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் குமரி மேற்கு மாவட்டத்தில் ஒரு ஒன்றிய சேர்மனையோ, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரையோ இவரால் வெற்றிபெற வைக்க முடியவில்லை.

``இதெல்லாம் என்கிட்டயே இல்லையே?'' - என்.பி.ஆர் கேள்வியும் எடப்பாடி ரியாக்‌ஷனும்!

திருவட்டாறு ஒன்றியத்தில் அ.தி.மு.க-வுக்கு மூன்று கவுன்சிலர்கள் கிடைத்தனர். தி.மு.க-வில் இரண்டு கோஷ்டியாக வேட்பாளர்கள் நின்றனர். அதில் தி.மு.க போட்டி வேட்பாளரான ஜெகநாதனுக்கு அ.தி.மு.க கவுன்சிலர்களை வைத்து முன்மொழியவும் வழிமொழியவும் வைத்தார். கட்சியில் சீனியர்களை ஒதுக்கிவிட்டு அ.ம.மு.க-வில் இருந்து ஒரு மாதத்துக்கு முன்பு வந்த இரண்டு பேருக்கு ஒன்றியச் செயலாளர் பதவி கொடுத்திருக்கிறார். அ.தி.மு.க-வினர் வைத்திருந்த டாஸ்மாக் பார்களை எல்லாம் தி.மு.க - காங்கிரஸ் கட்சியினருக்கு விற்றுவிட்டார். அதில் ஒரு பாருக்கு நான்கு லட்சம் வீதம் இரண்டு பாருக்கு எட்டு லட்சம் ரூபாய் கேட்ட தகவல் தொழில்நுட்பப்பிரிவு மேற்கு மாவட்டச் செயலாளர் மனோவின் ஆடியோ வாட்ஸ் அப்களில் பரவியது. அவரை தலைமை கட்சியில் இருந்து நீக்கிய பிறகும், இப்போது தன் உதவியாளராக வைத்துள்ளார்.

இவர் தலைமையில் நகர உள்ளாட்சித் தேர்தலையும் 2021 சட்டசபைத் தேர்தலையும் சந்தித்தால் மீண்டும் தோல்விதான் மிஞ்சும். இதுகுறித்து விவரமாகக் குறிப்பிட்டு கட்சித் தலைமைக்கு புகார் கடிதம் எழுதியிருந்தேன். அந்தக் கோபத்தில் என்னைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்!" என்று பொரிந்து தள்ளினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் ஜான் தங்கம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் ஜான் தங்கம்
ஐ.நா தீர்மானத்திலிருந்து விலகும் இலங்கை... இனி போர்க்குற்ற விசாரணை நடக்குமா?

இதுபற்றி கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் ஜான் தங்கத்திடம் பேசினோம், "குமரி மேற்கு மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் பத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஐந்து ஒன்றியக் கவுன்சிலர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இங்கு மதம் சார்ந்த அரசியல் என்பதால் பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைக்கும்போது கிறிஸ்துவ ஓட்டுகள் கிடைக்காமல் போகும். அந்த நிலையிலும் இவ்வளவு சீட் வாங்கியுள்ளோம். நான் எந்தத் தொகுதியில் வேட்பாளராக நிற்க வேண்டும் என்பதை முடிவு செய்யவில்லை. நாஞ்சில் டொமினிக் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வார்டில்கூட தேர்தல் வேலை செய்யவில்லை. அதனால் அவரை பொறுப்பில் இருந்து மாற்றினேன். அந்தக் கோபத்தில் இப்படிப் பேசுகிறார்!" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு