Published:Updated:

பேரறிவாளன் விடுதலை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தின் உச்சகட்ட கோபத்துக்குக் காரணம் என்ன?

பேரறிவாளன்

பேரறிவாளவன் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா இல்லை ஜனாதிபதிக்கு இருக்கிறதா என்கிற விவாதங்கள்தான் நடந்துவருகின்றனவே தவிர எந்த முடிவும் எட்டப்படவில்லை.

பேரறிவாளன் விடுதலை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தின் உச்சகட்ட கோபத்துக்குக் காரணம் என்ன?

பேரறிவாளவன் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா இல்லை ஜனாதிபதிக்கு இருக்கிறதா என்கிற விவாதங்கள்தான் நடந்துவருகின்றனவே தவிர எந்த முடிவும் எட்டப்படவில்லை.

Published:Updated:
பேரறிவாளன்

``ஆளுநர், குடியரசுத் தலைவர் அதிகாரம் குறித்த விஷயங்களுக்குப் போகாமல் பேரறிவாளனை நாங்கள் ஏன் விடுவிக்கக் கூடாது...பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. பேரறிவாளனை விடுவிப்பதே இந்த வழக்கை முடித்துவைக்க ஒரே தீர்வு எனக் கருதுகிறோம். விடுதலை செய்வதில் யாருக்கு அதிகாரம் என்ற குழப்பத்தில் பேரறிவாளன் ஏன் சிக்க வேண்டும்?''

என மத்திய அரசை நோக்கி உச்ச நீதிமன்றம் கேள்விக்கணைகளை தொடுத்திருப்பது அரசியல் அரங்கில் விவாதப் பொருளாகியுள்ளது. மேலும், `பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை மத்திய அரசு ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும்' என்று கூறி வழக்கை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் - ஆளுநர் ஆர்.என்.ரவி
முதல்வர் மு.க.ஸ்டாலின் - ஆளுநர் ஆர்.என்.ரவி

கடந்த 2018, செப்டம்பர் 9-ம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரையும் விடுதலை செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், ஆளுநர் அந்த மனுமீது எந்த முடிவும் எடுக்காமல் இருக்கவே, அது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், தண்டனை அனுபவித்து வருபவர்களில் ஒருவரான பேரறிவாளன். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் எனப் பலமுறை எச்சரித்து, ஒரு முறை காலக்கெடுவும் விதித்தனர். ஆனால், ஏழு பேர் விடுதலை குறித்த ஆவணங்களை குடியரசுத் தலைவருக்கு கவர்னர் அனுப்பியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து, இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா இல்லை ஜனாதிபதிக்கு இருக்கிறதா என்கிற விவாதங்கள்தான் நடந்துவருகின்றனவே தவிர எந்த முடிவும் இன்னும் எட்டப்படவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் கடந்த 27-ம் தேதி பேரறிவாளன் தொடுத்திருந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போதுதான் மேற்கண்ட மிகக் கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர் நீதிபதிகள். அதுமட்டுமில்லாமல், ``அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவுக்கு எதிராகவும் மாநில ஆளுநர் செயல்பட்டால் அது கூட்டாட்சி கட்டமைப்புக்கே மிகப்பெரிய பாதகமாகிவிடும். அதுமட்டுமல்லாமல், மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு எதிராகச் சொந்த கண்ணோட்டத்தில் செல்ல ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. மேலும், மாநில அமைச்சரவை அனுப்பக்கூடிய பரிந்துரைகளைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது?'' எனக் கருத்து தெரிவித்திருப்பது அரசியல் அரங்கில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது.

பேரறிவாளன்
பேரறிவாளன்

நீதிபதிகள் இவ்வளவு தீவிரமாகக் கருத்து தெரிவிக்கக் காரணமாக அமைந்தது என்ன?

பேரறிவாளனின் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரபுவிடம் பேசினோம்.

``கடந்தமுறை பேரறிவாளனுக்கு பெயில் கொடுக்கும்போது, அவரை விடுதலை செய்யும் விவகாரத்தில் கவர்னருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கிறதா... அதை அவர் சரியாகப் பயன்படுத்துகிறாரா என்பதை முடிவு செய்யலாம் என்றுதான் 27-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர். ஆனால், நீதிமன்றத்தின் பார்வை தற்போது மாறியிருக்கிறது. `கவர்னர் தான்தோன்றித்தனமாகச் செயல்படுவது மாநில அரசின் உரிமையை, கூட்டாட்சித் தத்துவத்தைக் கைவைப்பதுபோல் இருப்பதாக நாங்கள் உணர்கிறோம். அதற்கான தரவுகள் இருந்தால் கொடுங்கள்' என்று எங்களிடம் கேட்டார்கள். நாங்களும் சமர்ப்பிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறோம். அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நட்ராஜ், ` விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசின் வரம்புக்கு உட்பட்டதே கிடையாது. மத்திய அரசின் அதிகாரத்துக்குட்பட்டது' என வாதத்தை முன்வைக்க நீதிபதிகள் எரிச்சலடைந்தனர். 'கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பியதே தவறு என்று நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அதை நாங்கள் வரவேற்கவில்லை. ஆனால், நீங்கள் பேசுவது கவர்னரின் செயலை ஊக்குவிப்பதைப்போல் இருக்கிறது. இது கூட்டாட்சித்தன்மையையே பாதிக்கும்' என நீதிபதிகள் அவரை எச்சரிக்கும்விதத்தில் பேசினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வழக்கறிஞர் பிரபு
வழக்கறிஞர் பிரபு

உடனே, மத்திய அரசின் வழக்கறிஞர், `இந்த விவகாரத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம்' என்றார். தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜேஷ் திரிவேதி, 'முடிக்கவிடாமல் நீங்கள்தான் இழுத்துக்கொண்டே இருக்கின்றனர்' எனத் தன் வாதங்களை முன்வைத்தார். உடனே நீதிபதிகள், `சட்டப்படி இந்த வழக்கை முடித்துவைக்கவா இல்லை முப்பதாண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருப்பதால் 141-ம் பிரிவின்படி அவர்களை நாங்களே விடுதலை செய்யவா?' என மத்திய அரசு வழக்கறிஞரிடம் கூற, அவர், `சட்டப்படியான முடிவுகளை எடுங்கள்' என்று கூறியிருக்கிறார். அடுத்த புதன்கிழமை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக, மத்திய அரசு, மாநில அரசுகளுக்குத் தொந்தரவு கொடுப்பதற்காகவும், ஆதிக்கம் செலுத்துவதற்காகவுமே புதிது புதிதாக ஆளுநர்களை நியமிக்கிறது. அது சரியான நடைமுறை இல்லை. அது தேவையில்லாத குழப்பங்களை உருவாக்கும் என்று நீதிபதிகள் உணர்ந்திருக்கிறார்கள். அதுவே இந்தக் கருத்துகளுக்கான அடிப்படை'' என்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism