Published:Updated:

சசிகலா கேள்வியைத் தவிர்த்த எடப்பாடி பழனிசாமி; கட்சியில் இணைக்க டெல்லி நிர்பந்தமா?

பிரதமர் மோடி, இ.பி.எஸ் & ஓ.பி.எஸ்

நேற்று காலை நாடாளுமன்ற வளாகத்தில், பிரதமர் மோடியை, ஓ.பி.எஸ்-ஸும் இ.பி.எஸ்-ஸும் சந்தித்து அரை மணி நேரத்துக்கும் மேலாக உரையாடினர்.

சசிகலா கேள்வியைத் தவிர்த்த எடப்பாடி பழனிசாமி; கட்சியில் இணைக்க டெல்லி நிர்பந்தமா?

நேற்று காலை நாடாளுமன்ற வளாகத்தில், பிரதமர் மோடியை, ஓ.பி.எஸ்-ஸும் இ.பி.எஸ்-ஸும் சந்தித்து அரை மணி நேரத்துக்கும் மேலாக உரையாடினர்.

Published:Updated:
பிரதமர் மோடி, இ.பி.எஸ் & ஓ.பி.எஸ்

''அ.தி.மு.க கவர்ன்மென்ட் திரும்ப ஃபார்ம் பண்ணணும்தான். எங்களுக்கான சீட்டைக்கூட குறைவா வாங்கிக்கிட்டோம். தி.மு.க திரும்ப ஆட்சிக்கு வரக் கூடாதுங்குறதுல நாங்கள் ரொம்பவே தெளிவா இருந்தோம். அமித் ஷாவும் உங்களைப் பார்த்துப் பேசினார். ஆனால், அப்போ நீங்க அதைக் கேட்டுக்கலை. இதே நிலைமை தொடர்ந்தா, நாடாளுமன்றத் தேர்தல்லயும் எதிரணி வலிமையாகிடும். இனிமேலாவது நாங்க சொல்றதைக் கேட்டுக்கோங்க'' என டெல்லி சென்ற அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடமும் வெடித்துப் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடியுடன் அ.தி.மு.கவினர்
பிரதமர் மோடியுடன் அ.தி.மு.கவினர்

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் தொடங்கி அ.தி.மு.க-வில் சலசலப்புகளுக்குப் பஞ்சமில்லை. ஒருபக்கம், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இடையிலான பனிப்போர், அதன் தொடர்ச்சியாகத் தனித்தனியாக அறிக்கைகள், மறுபுறம், சசிகலா தரும் நெருக்கடிகள், தற்போது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு என ஏகப்பட்ட குழப்பங்கள் சூழ்ந்திருக்கின்றன. இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு டெல்லிக்குச் சென்றார் ஓ.பன்னீர்செல்வம். அவருடன் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் சென்றார். தொடர்ந்து அன்றிரவே, யாரும் எதிர்பாராத வகையில், முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியுடன் டெல்லி புறப்பட்டுச் சென்றார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இருவரும் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதேபோல, நேற்று காலை நாடாளுமன்ற வளாகத்தில், பிரதமர் மோடியை, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரும் சந்தித்து அரை மணி நேரத்துக்கும் மேலாக உரையாடினர். வெளியில் வந்து செய்தியாளர்களைச் சந்தித்தவர்கள், ``மேக்கேதாட்டு அணைகட்ட அனுமதி வழங்கக் கூடாது, தமிழகத்துக்கு அதிக அளவில் தடுப்பூசிகள் வழங்க வேண்டும், மீனவர் பிரச்னையில் சுமுகமான சூழலை உருவாக்க வேண்டும். காவிரி – கோதாவரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் நெடுஞ்சாலைத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்” போன்ற கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்ததாகத் தெரிவித்தனர்.

பிரதமர் மோடிஇ.பி.எஸ்&ஓ.பி.எஸ்
பிரதமர் மோடிஇ.பி.எஸ்&ஓ.பி.எஸ்

ஆனால், ``இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் கொடுத்த கோரிக்கை மனுவை பிரதமர் மோடி அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார். தமிழ்நாட்டில் என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன, அதற்கு என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும். நான் சொல்கிற விஷயங்களை நீங்கள் கேளுங்கள்'' எனச் சில ஆலோசனைகளை வழங்கியதாக அ.தி.மு.க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நேற்று நடந்த இந்தச் சந்திப்பு குறித்து, நாம் அ.தி.மு.க-வின் சில முக்கிய நிர்வாகிகளிடம் பேசினோம். ``மோடி இருவரிடமும் பேசியது என்ன... கட்சி வட்டாரத்தில் எப்படியும் செய்திகள் கசிந்திருக்கும்... என்னதான் நடந்தது பேச்சுவார்த்தையில்?” என்பதுதான் நம் கேள்வியாக இருந்தது. பலரிடமும் பேசியதில் கிடைத்ததன் சாராம்சம் இதுதான்.

``நாடாளுமன்றம் நடக்கும்போது பொதுவாக யாரையும் சந்தித்துப் பேச மாட்டார் பிரதமர் மோடி. எங்கள் கட்சியில் உட்கட்சி மோதல்கள் தீவிரமாகிக்கொண்டே போவதால்தான் உடனடியாக இருவரையும் அழைத்துப் பேசியிருக்கிறார். அப்போது சசிகலா குறித்து எடப்பாடி புகார் பட்டியல் வாசித்திருக்கிறார். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட மோடி, ``தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அகில இந்திய அளவில் காங்கிரஸ் அணிக்கு வலிமை கூடிவிடும். தவிர, தி.மு.க ஆட்சிக்கு வருவதையும் நாங்கள் விரும்பவில்லை. அதனால், எப்படியாவது அவர்களை ஜெயிக்கவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். நம் கூட்டணி வெற்றி பெற சசிகலாவும் உடனிருந்தால் நல்லது என்ற உளவுத்துறையின் ரிப்போர்ட் வந்தது. அதனால்தான், அமித் ஷா மூன்று மணி நேரம் உங்களிடம் பேசிவிட்டு வந்தார். ஆனால், சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பதற்கு... ஏன்... அ.ம.மு.க-வைக் கூட்டணியில் சேர்ப்பதற்குக்கூட நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. நம் கூட்டணி வெற்றிபெற வேண்டும். அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதால்தான் அமித் ஷா உங்கள் இருவரையும் தேடிவந்து சந்தித்தார். ஆனாலும் நீங்கள் அவர் சொன்ன எதையும் கேட்கவில்லை.

பிரதமர் மோடி இ.பி.எஸ்&ஓ.பி.எஸ்
பிரதமர் மோடி இ.பி.எஸ்&ஓ.பி.எஸ்

உங்கள் சுயநலனுக்காக மட்டுமே நடந்துகொண்டீர்கள். சசிகலா வேண்டாம் என்பதில் ஏன் இவ்வளவு அழுத்தமாக இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. தேர்தலுக்கு முன்பாக, `அமைதியாக இருங்கள்’ என நாங்கள் சொன்ன வார்த்தைக்கு மதிப்பளித்து அவர் ஒதுங்கிக்கொண்டார். தினகரனும்கூட தேர்தலில் கடைசி நேரத்தில், பெரிய அளவில் வேலை செய்யவில்லை. `கட்சியைக் கலைக்கச் சொல்லுங்கள்’ என்றோம். அதற்கான வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் தேர்தல் முடிவுகள் வந்த பிறகும்கூட அப்படியே இருக்கிறீர்கள். உங்கள் கட்சி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரின் பெயருக்காகத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. உங்களுக்காக யாரும் உங்கள் கட்சிக்கு ஓட்டுப்போடவில்லை” என்று பொங்கியிருக்கிறார்.

தொடர்ந்து ``2024-ல் நடக்கப்போகிற நாடாளுமன்றத் தேர்தலில் நம் கூட்டணி வலிமையாக இருக்க வேண்டும். எதிரணியை வெல்லவிடக் கூடாது, அதற்கான வேலைகளை இப்போதே தொடங்க வேண்டும். நீங்களும் சசிகலாவும் ஒன்றாகச் சேர வேண்டும். அதனால் இனிமேலாவது சுதாரித்து நடந்துகொள்ளுங்கள். அமித் ஷாவைச் சந்தித்து இது குறித்துப் பேசுங்கள்'' எனவும் மோடி அறிவுறுத்தியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்துதான், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரும் சந்தித்திருக்கின்றனர்.

சசிகலா - மோடி
சசிகலா - மோடி

செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அமித் ஷாவிடம் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்ற எடப்பாடி, சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவிச் சென்றார். ஆனால், செய்தியாளர்களிடம் நடந்துகொண்டதுபோல, சசிகலா விஷயத்தில் பிரதமர் மோடியின் கட்டளைகளை மீறி பழனிசாமி செல்ல முடியுமா, செல்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism