Published:Updated:

பேரறிவாளன் விடுதலை: அற்புதம்மாள் செய்த அற்புதம்; போராட்டம் செய்த மாயம்!

பேரறிவாளன் - அற்புதம்மாள்

`என் மகன் ஒரு நிரபராதி’ என்கிற வார்த்தையைக் கோடி முறை உச்சரித்திருக்கும் அற்புதம்மாள், இதையே வலியுறுத்தி தமிழக முதலமைச்சர்களுக்கும், மற்ற அரசியல் தலைவர்களுக்கும், சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும் கொண்டு சென்று, தன் மகனுக்காகப் போராடினார்.

பேரறிவாளன் விடுதலை: அற்புதம்மாள் செய்த அற்புதம்; போராட்டம் செய்த மாயம்!

`என் மகன் ஒரு நிரபராதி’ என்கிற வார்த்தையைக் கோடி முறை உச்சரித்திருக்கும் அற்புதம்மாள், இதையே வலியுறுத்தி தமிழக முதலமைச்சர்களுக்கும், மற்ற அரசியல் தலைவர்களுக்கும், சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும் கொண்டு சென்று, தன் மகனுக்காகப் போராடினார்.

Published:Updated:
பேரறிவாளன் - அற்புதம்மாள்

``நான் ஓர் அப்பாவி பையனின் தாய். 28 வருடங்களுக்கு முன்பு என்னிடமிருந்து பறிக்கப்பட்டான். அப்போது அவனுக்கு 19 வயது. அன்று முதல் நான் அவன் பின்னால் ஓட ஆரம்பித்தேன், இன்னும் ஓடுகிறேன்..!" எனத் தன் ட்விட்டர் பயோவில் வைத்திருக்கும் அற்புதம்மாளின் ஓட்டத்துக்கு 31 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஓய்வு கிடைத்திருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது ஜாமீனில் இருக்கும் பேரறிவாளனை இன்று (மே18-ம் தேதி) விடுதலை செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

அற்புதம்மாள்
அற்புதம்மாள்

அற்புதம்மாளின் பயணம் பூக்களின் மீதானதல்ல. தோள்பட்டையில் ஒரு பை; களைத்துப்போன முகத்தில் ஒரு நம்பிக்கை; ரப்பர் செருப்பு தேய தன் மகனின் விடுதலைக்காக அவர் நடந்த நடைகள்... எனக் கடந்த 31 ஆண்டுகளாகப் பல அரசியல் தலைவர்கள், பல கோரிக்கைக் கடிதங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள் என முற்களையே அவர் கடந்து வந்திருக்கிறார்.

`என் மகன் ஒரு நிரபராதி’ என்கிற வார்த்தையைக் கோடி முறை உச்சரித்திருக்கும் அற்புதம்மாள், இதையே வலியுறுத்தி தமிழக முதலமைச்சர்களுக்கும், மற்ற அரசியல் தலைவர்களுக்கும், சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும், மக்கள் மத்தியிலும் கொண்டு சென்று, தன் மகனுக்காகப் போராடினார். `எப்படியாவது மகன் வீடு வர வேண்டும்' என்ற அவரின் தொடர் போராட்டம், பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவைத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சட்டத்தை நம்பி தன்னுடைய போராட்டத்தைத் தொடர்ந்த அற்புதம்மாள், வெற்றிபெற்ற முதல் இடம் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி தியாகராஜனின் மனமாற்றம். ஒரு தாயின் போராட்டம், குற்ற உணர்ச்சியிலிருந்த அந்த அதிகாரியின் மனசாட்சியைத் தட்டியெழுப்பி, உண்மையை வெளிக்கொண்டு வந்தது. பேரறிவாளனிடம் நடத்திய விசாரணையில், 'எனக்கு எதுவும் தெரியாது' என அவர் கூறியதை வாக்குமூலத்தில் தான் தவிர்த்ததை சி.பி.ஐ அதிகாரி தியாகராஜனே பின்னாளில் ஒப்புக்கொண்டார்.

அற்புதம்மாள் - ஜெயலலிதா
அற்புதம்மாள் - ஜெயலலிதா

2014-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்ய, தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. இதற்காக ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் அற்புதம்மாள். அந்தச் சந்திப்புக்குப் பின்பு, ``அழாதீங்கம்மா, அதான் உங்களுடைய மகன் விடுதலையாகித் திரும்ப வரப்போகிறாரே” என முதல்வர் ஜெயலலிதா ஆறுதல் கூறியதாக அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, 2018-ல் எழுவரையும் விடுதலைச் செய்யக் கோரி தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்காக அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, தன் மகன் உட்பட ஏழு பேரை விடுதலை செய்யப் பரிந்துரைத்ததற்கு நன்றி தெரிவித்தார் அற்புதம்மாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மே 28, 2021-ல், பரோலில் பேரறிவாளன் தனது ஜோலார்பேட்டை வீட்டுக்கு வந்தார். இந்த பரோலே நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகுதான் அவருக்குக் கிடைத்தது. சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகள் காரணமாக அவருக்கு பரோல் வழங்குமாறு தாய் அற்புதம்மாள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, 30 நாள்கள் பரோல் வழங்கப்பட்டது. இதற்காக நன்றி தெரிவித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார் அற்புதம்மாள். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தவர், "பேரறிவாளனுக்கு உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டிய சூழல் உள்ளது. தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை அவருக்குத் தேவைப்படுகிறது. எனவே, உடல்நலன் சார்பாகத் தொடர்ந்து சிகிச்சையளிக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும், பரோல் நீட்டிப்பது தொடர்பாகவும் கோரிக்கை வைத்தேன். நிச்சயம் முடிந்ததைச் செய்வதாக முதல்வர் உறுதியளித்தார். 'நீங்கள் இருக்கும் உணர்வோடுதான் நானும் உள்ளேன்' என முதல்வர் கூறினார்" எனத் தெரிவித்தார்.

பரோலுக்குத் துணைநின்ற ஸ்டாலினுக்கு நன்றி: நெகிழும் அற்புதம்மாள்
பரோலுக்குத் துணைநின்ற ஸ்டாலினுக்கு நன்றி: நெகிழும் அற்புதம்மாள்

அற்புதம்மாளின் தொடர் போராட்டம், உச்ச நீதிமன்றத்தின் மனதையே கரைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். 2018-ல் அ.தி.மு.க அரசு பரிந்துரைத்த எழுவர் விடுதலை விவகாரத்தில், ஆளுநர் மாளிகை முடிவெடுக்காததை உச்ச நீதிமன்றமே கண்டித்தது. இதற்கிடையே, 'பேரறிவாளன் உட்பட இந்த வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்' என மத்திய அரசுக்குத் தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியது. இந்த கடிதப் போக்குவரத்துகள், உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்புகள் எல்லாவற்றையும் கடந்து, இன்று விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் பேரறிவாளன். ஒரு தாயின் மன உறுதியும், தவ வாழ்வும், 31 ஆண்டுகளுக்குப் பிறகு சுபமான செய்தியை அவருக்கு அளித்திருக்கிறது.

தன்னுடைய விடுதலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன், ``என் விடுதலையைத் தமிழ் மக்களும், தமிழர்களும் நினைத்தார்கள், அன்பு செலுத்தினார்கள், ஆதரவு தெரிவித்தார்கள். தங்களது வீட்டில் ஒரு பிள்ளையாக நினைத்தார்கள். 31 ஆண்டுக்காலம் எங்கள் அம்மாவின் தியாகம், போராட்டம், ஆரம்பககாலங்களில் அவர் வெளியில் சந்தித்த அவமானங்கள், புறக்கணிப்புகளையெல்லாம் கடந்து இந்தத் தீர்ப்பு கிடைத்திருக்கிறது. எங்கள் பக்கம் இருந்த உண்மை, நியாயம்தான் இதற்கான வலிமையைக் கொடுத்ததாக நம்புகிறேன். மார்க்சிம் கார்க்கி எழுதிய `தாய்' நாவலைப் படித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை அதைப் படிக்கும்போதும், ஒவ்வோர் உணர்வை அது தந்தது. பிறகு, `தாய்’ நாவலுடன் என் தாயை ஒப்பிட்டேன். இதுவரை அவரிடம் நான் இதைக் கூறியதில்லை. என் தாயாரின் இந்தச் சட்டப் போராட்டத்துக்குப் பின்னால், என் ஒட்டுமொத்த குடும்பத்தின் ஆதரவும் உள்ளது. சகோதரிகள், சகோதரிகளின் கணவர்கள் எல்லாருடைய பலமும்தான் இன்று இந்த வெற்றி” என்றிருக்கிறார்.

பேரறிவாளன் விடுதலை
பேரறிவாளன் விடுதலை

வழக்குகள், மேல்முறையீடு, அரசியல் அழுத்தங்கள் எனச் சுற்றிச் சுழலும் எழுவர் விடுதலையில், கடந்த 31 ஆண்டுகளாகத் தன் மகனின் விடுதலை என்பதை மட்டுமே சுவாசக் காற்றாகக் கொண்டு சுழன்றார் அற்புதம்மாள். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் இப்போது தன் மகனின் சுதந்திரக் காற்றையும் சேர்த்துச் சுவாசிக்கிறார். இந்த வெற்றி அற்புதம்மாளின் அற்புதம்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism