Published:Updated:

``அரியணையில் உட்காருவது ஆங்கிலமா... இந்தியா?" - சு.வெங்கடேசன்

சு.வெங்கடேசன்

``ஹிந்தியைத் தவிர மற்ற மொழிகளை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுப்பதும், ஆங்கிலத்தை அகற்றுவதுமே ஒன்றிய அரசின் தந்திரம்." - சு.வெங்கடேசன்

``அரியணையில் உட்காருவது ஆங்கிலமா... இந்தியா?" - சு.வெங்கடேசன்

``ஹிந்தியைத் தவிர மற்ற மொழிகளை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுப்பதும், ஆங்கிலத்தை அகற்றுவதுமே ஒன்றிய அரசின் தந்திரம்." - சு.வெங்கடேசன்

Published:Updated:
சு.வெங்கடேசன்

``ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது" என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது பெரும் சர்சசையானது.

இந்த நிலையில், வெங்கடேசன் எம்.பி இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ``ஒன்றிய அரசு ஒரே நேரத்தில் இரண்டு வஞ்சகத்தை தேசத்துக்கு இழைக்கிறது. குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்(ICPS), இனி `மிஷன் வாத்சல்யா' என அழைக்கப்படுமாம். சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம். நிதி ஒதுக்கீடோ சரிபாதிக்குக் குறைப்பு. இந்தியக் குழந்தைகளுக்கும் இந்திய மொழிகளுக்கும் ஒருசேர அநீதி'' எனப் பதிவிட்டுள்ளார்.

மோடி, ஜே.பி.நட்டா, அமித் ஷா
மோடி, ஜே.பி.நட்டா, அமித் ஷா
சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும் மற்றொரு பதிவில், ``அரியணையில் யார் உட்காருவது ஆங்கிலமா? இந்தியா? என்றால் எங்கள் பதில் எட்டாவது அட்டவணையின் 22 மொழிகளுமே. ஹிந்தியைத் தவிர மற்ற மொழிகளை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுப்பதும், ஆங்கிலத்தை அகற்றுவதுமே ஒன்றிய அரசின் தந்திரம். தந்திரங்களை தாய்மொழி கொண்டு மக்கள் வெல்வார்கள்.'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism