Published:Updated:

``நீட் மசோதா கலந்தாலோசனைக்கு கால வரையறை நிர்ணயிக்க இயலாது; உள்துறை அமைச்சகம் பதில்”- சு.வெங்கடேசன்

நீட் தேர்வு

``கால வரையறை நிர்ணயிக்க இயலாது என்று சொல்லி காலம் கடத்தவும் கூடாது. ஆளுநர் கடத்திய காலமே அதிகம். நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்பது தமிழ்நாட்டின் குரல். அது வெல்லும்." என சு.வெங்கடேசன் தெரிவித்திருக்கிறார்.

``நீட் மசோதா கலந்தாலோசனைக்கு கால வரையறை நிர்ணயிக்க இயலாது; உள்துறை அமைச்சகம் பதில்”- சு.வெங்கடேசன்

``கால வரையறை நிர்ணயிக்க இயலாது என்று சொல்லி காலம் கடத்தவும் கூடாது. ஆளுநர் கடத்திய காலமே அதிகம். நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்பது தமிழ்நாட்டின் குரல். அது வெல்லும்." என சு.வெங்கடேசன் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
நீட் தேர்வு

சமீபத்தில் நீட் தேர்வு நாடு முழுவதும் நடந்து முடிந்திருக்கும் நிலையில் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட வரைவு குறித்து மத்திய அரசிடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு உள்துறை அமைச்சகம் பதில் அனுப்பியிருக்கிறது.

எம்பி சு.வெங்கடேசன்
எம்பி சு.வெங்கடேசன்

இது குறித்து சு.வெங்கடேசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட வரைவு ஒன்றிய அரசுக்கு ஒப்புதல் கோரி அனுப்பப்பட்டிருக்கிறதா... அதனுடைய தற்போதைய நிலை என்ன... ஒப்புதல் வழி முறையில் என்னென்ன முன்னேற்றங்கள்... என்ன கால வரையறைக்குள் முடிவு எடுக்கப்படுமா என்று கேட்டிருந்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதற்கு உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா அளித்திருக்கும் பதிலில், 'தமிழ்நாடு ஆளுநர் பரிசீலனைக்காகவும், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகவும் "தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்ட பிரிவுகள் சட்ட வரைவு 2021" உள்துறை அமைச்சகத்துக்கு 02.05.2022 அன்று வந்து சேர்ந்தது.

நீட் தேர்வு
நீட் தேர்வு

தமிழ்நாடு ஆளுநர் பரிசீலனைக்காகவும், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகவும் மாநில ஆளுநர்கள் அனுப்புகிற சட்ட வரைவுகள் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு கருத்து கேட்புக்காக அனுப்பப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படுவது நடைமுறை.

அது போன்று ஒன்றிய அமைச்சகங்கள் / துறைகளின் கருத்து கேட்பு தொடங்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் தங்களின் கருத்துகளை அளித்துவிட்டன. அவற்றை, தமிழ்நாடு அரசிடம் ஜூன் 21 மற்றும் 27 முறையே பகிர்ந்துகொண்டு கருத்துகளை, விளக்கங்களைக் கேட்டிருக்கிறோம்.

இது போன்ற பிரச்னைகளில் கலந்தாலோசனை நேரம் எடுக்கும். ஒப்புதலுக்கு கால வரையறை நிர்ணயிக்க இயலாது' என்று தெரிவித்திருக்கிறார்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

கால வரையறை நிர்ணயிக்க இயலாது என்று சொல்லி காலம் கடத்தவும் கூடாது. ஆளுநர் கடத்திய காலமே அதிகம். நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்பது தமிழ்நாட்டின் குரல். அது வெல்லும். வெல்லும் வரை நம் முயற்சிகளைத் தொடர்வோம்" என்று அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.