Published:Updated:

``முதல் தனியார் ரயில் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்" - சு.வெங்கடேசன் எம்.பி

ரயில்வே

``தனியாருக்குத் தாரை வார்த்தால் கட்டணங்கள் உயரும் , சலுகைகள் பறிபோகும் என்பதன் எடுத்துக்காட்டுதான் ஷீர்டி ரயில்” என்கிறார் சு.வெங்கடேசன் எம்.பி.

``முதல் தனியார் ரயில் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்" - சு.வெங்கடேசன் எம்.பி

``தனியாருக்குத் தாரை வார்த்தால் கட்டணங்கள் உயரும் , சலுகைகள் பறிபோகும் என்பதன் எடுத்துக்காட்டுதான் ஷீர்டி ரயில்” என்கிறார் சு.வெங்கடேசன் எம்.பி.

Published:Updated:
ரயில்வே

``கோயம்புத்தூரிலிருந்து ஷீர்டிக்குத் தனியார் நிறுவனத்தின் மூலம் ரயில் சேவை தொடங்கப்படவிருப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும்" என்று ரயில்வேதுறையை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.

தெற்கு ரயில்வே
தெற்கு ரயில்வே

இது குறித்து அவர் கூறுகையில், "ஜூன் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு வட கோவையிலிருந்து ஷீர்டிக்கு முதல் தனியார் ரயில் இயங்க ரயில்வேதுறை அனுமதித்திருக்கிறது. கோவையைச் சேர்ந்த எம்.என்.சி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் இதை இயக்கவிருக்கிறது.

ரயில், தண்டவாளம், சிக்னல் நடைமேடை ஆகியவை ரயில்வேக்கு சொந்தம். ரயில்வே டிரைவர் கார்ட் வண்டியை இயக்குவார்கள். ஆனால், டிக்கெட் விற்பனை, பயணிகளைப் பரிசோதிப்பது அனைத்தும் தனியாருக்கு. கட்டணம் அவர்கள் விருப்பம்போல் வைத்துக்கொள்ள அனுமதி. இது ஷீர்டிக்குச் செல்ல விரும்பும் பக்தர்களைச் சுரண்டும் நடவடிக்கை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோவையிலிருந்து ஷீர்டிக்குச் செல்ல 1,458 கிலோமீட்டர் தூரத்துக்கு ஸ்லீப்பர் கட்டணம் 1,280 ரூபாய். ஆனால், அவர்கள் வசூலிப்பது 2,500 ரூபாய். மூன்றடுக்கு குளிர்சாதனப் படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூபாய் 2,360. தனியார் கட்டணம் ரூபாய் 5,000. குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் 4,820 ரூபாய். ஆனால் தனியார் கட்டணம் 7,000 ரூபாய். குளிர்சாதன முதல் வகுப்பு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூபாய் 8,190. தனியார் கட்டணம் 10,000 ரூபாய். அதாவது ஸ்லீப்பர் கட்டணம் இரண்டு மடங்கு. குளிர்சாதனப் படுக்கை மூன்றடுக்கு, இரண்டடுக்கு ஆகியவற்றுக்கு ஒன்றரை மடங்கு. முதல் வகுப்பு ஒண்ணே கால் மடங்குக் கூடுதலாகக் கட்டணக் கொள்ளை.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

தனியாருக்கு உரிமைக் கட்டணம் முன்பு 40 லட்சம் ரூபாய் என்று தீர்மானித்து, பின்னர் அதிலும் பதினோரு லட்சம் குறைத்து வசூலிப்பது ரயில்வேயின் வருமானத்தை பாதிக்கவில்லையா?

நாங்கள் சாதாரண மக்கள் பயன்படுத்தும் ரயில்வேயைத் தனியாரிடம் விடக் கூடாது என்று வலியுறுத்திவருகிறோம். ரயில்வே அமைச்சர் அண்மையில் சென்னைக்கு வந்தபோது ரயில்வேயில் தனியார்மயம் கிடையாது என்று அடித்துச் சொன்னார். ஆனால், அதற்கு மாறாக முதல் தனியார் ரயிலை தமிழகத்திலிருந்து இயக்குவது கண்டனத்துக்குரியது. தனியார் ரயில் என்றால் ஒரு கட்டணச் சலுகையும் கிடையாது. ஏன் முதியோர் கட்டணச் சலுகையும் கிடையாது. ஒன்றரை மடங்கு முதல் இரண்டு மடங்கு வரை கட்டண உயர்வு. இதுதான் தனியார்மயம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில் இந்திய ரயில்வே தேசிய ரயில் திட்டத்தை அறிவித்திருக்கிறது. அதன்படி அனைத்து லாபம் வரும் பயணி வண்டிகளும், அனைத்து சரக்கு ரயில்களும் 2031-க்குள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படும். தனியாருக்குத் தாரை வார்த்தால் கட்டணங்கள் உயரும், சலுகைகள் பறிபோகும் என்பதன் எடுத்துக்காட்டுதான் ஷீர்டி ரயில்.

ரயில்வே
ரயில்வே

இவர்களுக்கு ஆன்மிகத்தின் பக்தியுமல்ல, தேசபக்தியுமல்ல, தனியார் பக்தி மட்டும்தான்.

கோவை- ஷீர்டி ரயிலை ரயில்வே நிர்வாகமே எடுத்து நடத்த வலியுறுத்துகிறேன். உலகின் முதல் பெரும் பொதுத்துறையான இந்திய ரயில்வேயின் இந்தத் தனியார்மயமாக்கல் செயல்பாட்டைத் தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்தவேண்டியது ஒவ்வோர் இந்தியரின் கடமை" என்று அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism