Published:Updated:

`திராவிடம் தமிழ் மொழியை அழிக்க உருவாக்கப்பட்ட சொல்லா?'- ஹெச்.ராஜாவுக்கு சுப.வீ-யின் பதில்

அயோத்திதாச பண்டிதரைத் தொடர்ந்து இரட்டைமலை சீனிவாசனும், திராவிடம் என்னும் சொல்லில்தான் தனது சமூக அமைப்பைக் கட்டினார்.

Suba. veerapandiyan
Suba. veerapandiyan

''மொழி குறித்து கருத்துச் சொல்ல ஹெச்.ராஜா ஒன்றும் மொழியியல் ஆய்வாளர் இல்லை'' என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

H.raja
H.raja

``திராவிடம் என்ற சொல்லே நம் தமிழ் மொழியை மறக்க, மறைக்க, அழிக்க உபயோகப்படுத்தும் சொல் என்பதை உணர்வோம்'' என பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, கடந்த வியாழக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

`இந்திய வரலாற்றுக்கே வெளிச்சம் பாய்ச்சும்!’ - கீழடி அகழாய்வு முடிவுகளால் நெகிழும் சு. வெங்கடேசன்

அதற்குப் பதிலளித்துள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் , ''பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, தமிழை அழிக்கவும் மறைக்கவும் உருவாக்கப்பட்ட சொல், திராவிடம் எனக் கூறியிருக்கிறார். மொழி குறித்து கருத்துச் சொல்ல அவர் மொழியியல் வல்லுநரா என்பது எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும், அவரிடம் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். திராவிடம் என்ற சொல்லை, 1892- ம் ஆண்டு முதன்முதலில் பயன்படுத்தியவர், அயோத்திதாச பண்டிதர்.

Ayothithasa pandithar
Ayothithasa pandithar

தமிழை மறுக்கவும், மறைக்கவும் அயோத்திதாசர் இப்படி ஒரு சொல்லைக் கொண்டுவந்திருக்கிறார் என அவர் சொல்வாரானால், அது தலித் மக்களையும், தமிழ் உணர்வாளர்களையும் கொச்சைப்படுத்தும் முயற்சி. அயோத்திதாச பண்டிதரைத் தொடர்ந்து இரட்டைமலை சீனிவாசனும், திராவிடம் என்னும் சொல்லில்தான் தனது சமூக அமைப்பைக் கட்டினார். எனவே, தலித் மக்களுக்கு எதிராக ஹெச்.ராஜா தொடுத்திருக்கும் இந்த அம்பை நாம் எதிர்கொள்வோம். அது எந்தப் பயனும் இல்லாமல் கீழே விழும் என்பது உறுதி'' என்றார் அவர்.