Published:Updated:

திமுக: ``எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில்...” - சுப்புலட்சுமி ஜெகதீசனின் விலகல் அறிக்கை

சுப்புலட்சுமி ஜெகதீசன் ( Photo: Vikatan )

``தலைவர் கலைஞர் மறைவுக்குப் பிறகு, தலைவர் கலைஞரின் விருப்பத்தின்படி தளபதி அவர்களை முதலமைச்சராக்கும் நோக்கத்துடன் கழகப் பணிகளை மட்டும் செய்துவந்தேன்." - சுப்புலட்சுமி ஜெகதீசன்

தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலிலிருந்து ஓய்வுபெற விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ``2009-ல் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணிக் காலம் நிறைவு பெற்றதற்குப் பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் கட்சிப் பணிகளை மட்டும் மேற்கொள்வது என்ற எனது முடிவை தலைவர் கலைஞர் அவர்களிடமே தெரிவித்துவிட்டேன். தலைவர் கலைஞர் மறைவுக்குப் பிறகு, அவரின் விருப்பத்தின்படி தளபதி அவர்களை முதலமைச்சராக்கும் நோக்கத்துடன் கழகப் பணிகளை மட்டும் செய்து வந்தேன்.

திமுக: ``எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில்...” - சுப்புலட்சுமி ஜெகதீசனின் விலகல் அறிக்கை

2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றிபெற்று, தலைவர் தளபதி முதலமைச்சராகப் பொறுப்பேற்று, அரசுப் பணிகளையும், கட்சிப் பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாக செயல்படுத்திக்கொண்டிருக்கிறார். இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இந்த நிறைவோடு அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி அன்று பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக எனது விலகல் கடிதத்தை, தலைவர் தளபதி அவர்களுக்கு அனுப்பிவிட்டேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சுப்புலட்சுமி ஜெகதீசன்
சுப்புலட்சுமி ஜெகதீசன்

1977-ம் ஆண்டு அ.தி.மு.க-வில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய சுப்புலட்சுமி ஜெகதீசன், பின்னர் தி.மு.க-வில் சேர்ந்து 1989-ம் ஆண்டு ஈரோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். மேலும், அப்போதே மாநில சமூகநலத்துறை அமைச்சர் பொறுப்பும் வகித்தார். தொடர்ந்து நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இருந்தவர் 2009-ல் பணிக்காலம் முடிந்து, 2021 சட்டமன்றத் தேர்தலில், ஈரோடு மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், அந்தத் தேர்தலில், பா.ஜ.க வேட்பாளரான சி.ஆர்.சரஸ்வதியிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.