Published:Updated:

``நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் தெரியவில்லை!’’ - சுப்பிரமணியன் சுவாமி

தொடர்ந்து பி.ஜே.பி ஆட்சி மீது எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்தச் சூழலில் பி.ஜே.பி-யின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமியே தங்கள் ஆட்சி குறித்து கடுமையாக விமர்சனம் செய்வதால் கடும் அதிருப்தியில் உள்ளது பி.ஜே.பி தலைமை.

சுப்பிரமணியன் சுவாமி - நிர்மலா சீதாராமன்
சுப்பிரமணியன் சுவாமி - நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "நாட்டின் பொருளாதாரம் முழுமையாக மந்தமடைந்துவிடவில்லை; வளர்ச்சியில் தேக்கம் ஏற்பட்டிருப்பது உண்மைதான். இதை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று கடந்த வாரம் நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்குப் பதிலளித்து பேசினார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, 'ரிசெட்' (Reset: Regaining India’s Economic Legacy) எனும் தலைப்பில், இந்தியப் பொருளாதாரத்தில் நிகழ வேண்டிய மாற்றங்கள் குறித்த புத்தகம் ஒன்றை எழுதினார் பி.ஜே.பி மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. அந்தப் புத்தகம் பற்றிய கலந்துரையாடல் கூட்டங்களில் தொடர்ந்து இந்தியப் பொருளாதாரத்தின் சமீபத்திய நிலையை விமர்சனம் செய்து வருகிறார்.

சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி

சுப்பிரமணியன் சுவாமி தான் சார்ந்திருக்கும் கட்சி என்ற போதிலும், பி.ஜே.பி அரசு மீதான விமர்சனங்களில் பின்வாங்குவதில்லை. சமீபத்தில் தன் புத்தகம், அயோத்தி வழக்குத் தீர்ப்பு முதலானவை குறித்து ஆங்கில ஊடகங்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, ''நாட்டின் பொருளாதார நிலையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி, மக்களை அயோத்தி தீர்ப்பையோ, ராமர் கோயிலையோ கொண்டாடவிடாது.

"நரசிம்ம ராவ், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் ராமர் கோயில் கட்டப்படவில்லையென்றபோதும், கட்சிக்காரர்கள் வீட்டில் அமர்ந்துகொண்டு, 'இந்தியா ஒளிர்கிறது' என்று திருப்தியடைந்தனர். தற்போதைய பொருளாதாரம் வீழ்ச்சியடையும் நிலையில் இருக்கிறது; நல்ல திட்டங்களால் இதைச் சரிசெய்ய முடியும். ஆனால், நல்ல திட்டங்கள் வருமா என்று தெரியவில்லை. இதனால் ஜார்க்கண்ட், டெல்லி சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுவது மிகக் கடினம்" என்று கூறியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.

பிரதமர் மோடிக்கு நாட்டின் பொருளாதாரம் பற்றிய உண்மையான தகவல்களை அமைச்சர்கள் சொல்வதில்லை. அவருக்குத் தெரிந்தால், இவர்களைப் பதவிநீக்கம் செய்துவிடுவார்."
சுப்ரமணியன் சுவாமி
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சராக விரும்பியதாகக் கூறியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, நிர்மலா சீதாராமனுக்குப் பொருளாதாரம் தெரியவில்லை எனவும், பத்திரிகையாளர் சந்திப்புகளில் தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளை அதிகாரிகளிடம் திருப்பிவிடுவதாகவும் கூறுகிறார்.

"பிரதமர் மோடிக்கு நாட்டின் பொருளாதாரம் பற்றிய உண்மையான தகவல்களை அமைச்சர்கள் சொல்வதில்லை. அவருக்குத் தெரிந்தால், இவர்களைப் பதவிநீக்கம் செய்துவிடுவார்" எனக் கூறும் சுப்பிரமணியன் சுவாமி, தான் மோடியைத் தனியாகச் சந்தித்து மூன்றரை ஆண்டுகள் ஆனதாகத் தெரிவித்துள்ளார்.

புள்ளிவிவரங்களை அரசு மாற்றியமைப்பது குறித்த சர்ச்சைக்கு பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, அதற்குக் காரணமாக மறைந்த முன்னாள் நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லியை சுட்டிக்காட்டியதோடு, தனது புத்தகத்தில் அதைப்பற்றி விரிவாக எழுதியுள்ளதாகக் கூறுகிறார்.

ஜி.டி.பி குறித்த சர்ச்சைகளைப் பேசிய அவர், "மத்திய அரசு இந்தியாவின் ஜி.டி.பி 4.8 சதவிகிதம் எனக் கூறுகிறார்கள்; என் கணிப்புப்படி, நாட்டின் ஜி.டி.பி 1.5 சதவிகிதம்தான்" என்றும் அதிர வைக்கிறார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துகளையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் அவர்.

சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி

தொடர்ந்து பி.ஜே.பி ஆட்சி மீது எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. சிறையில் இருந்து வெளிவந்த மறுநாளே, நாட்டின் பொருளாதார நிலை குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியுள்ளார் ப.சிதம்பரம். இந்தச் சூழலில் பி.ஜே.பி-யின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமியே தங்கள் ஆட்சி குறித்து கடுமையாக விமர்சனம் செய்வதால் கடும் அதிருப்தியில் உள்ளது பி.ஜே.பி தலைமை. அதன் அடுத்த கட்டமாக, சுப்பிரமணியன் சுவாமியைக் கட்டுப்படுத்த முடியாது என்பதால், அவரைக் 'கூல்' செய்ய திட்டங்கள் தீட்டி வருகிறதாம் கட்சித் தலைமை.

`நான் நிர்பலா அல்ல, சப்லா... !’- மக்களவையில் கொதித்த நிர்மலா சீதாராமன்