Published:Updated:

``இந்த ஆகஸ்ட் 15 உரையில் பிரதமர் என்னென்னெ வாக்குறுதிகள் அளிக்கப்போகிறார்..?" - சுப்பிரமணியன் சுவாமி

சுப்பிரமணியன் சுவாமி

பா.ஜ.க முன்னாள் எம்.பி சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடியின் 2017-ம் ஆண்டு சுதந்திர தின விழா உரையை சுட்டிக்காட்டி அவரை மறைமுகமாக விமர்சித்திருக்கிறார்.

டெல்லி செங்கோட்டையில் நாளை நடைபெறவுள்ள 75-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களிடம் உரை ஆற்றுகிறார். அதன் காரணமாக டெல்லி செங்கோட்டையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் நாட்டு மக்களிடத்தில் உரையாற்றும் மோடி, பல்வேறு வாக்குறுதிகளை அளிப்பது வழக்கமான ஒன்றாகும்.

இந்த நிலையில், பா.ஜ.க முன்னாள் எம்.பி சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடியின் 2017-ம் ஆண்டு சுதந்திர தின விழா உரையை சுட்டிக்காட்டி அவரை மறைமுகமாக விமர்சித்திருக்கிறார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், `` `2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள், அனைவருக்கும் வீடு, விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்குவது, புல்லட் ரயில் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்' என பிரதமர் மோடி 2017-ம் ஆண்டு சுதந்திர தின விழா உரையில் வாக்குறுதி அளித்தார்.

சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி

ஆனால் அது நடந்ததா?... இந்தாண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி உரையில் பிரதமர் என்னென்னெ வாக்குறுதிகள் அளிக்கப்போகிறார்?'' எனப் பதிவிட்டிருக்கிறார்.