Published:Updated:

சுப்பிரமணியன் சுவாமி அட்டாக்ஸ்!

சுப்பிரமணியன் சுவாமி
பிரீமியம் ஸ்டோரி
சுப்பிரமணியன் சுவாமி

பிரதமர் மோடிக்கும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் பொருளாதாரம் தெரியாது.

சுப்பிரமணியன் சுவாமி அட்டாக்ஸ்!

பிரதமர் மோடிக்கும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் பொருளாதாரம் தெரியாது.

Published:Updated:
சுப்பிரமணியன் சுவாமி
பிரீமியம் ஸ்டோரி
சுப்பிரமணியன் சுவாமி

பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவர் சுப்பிரமணியன் சுவாமி. அதிரடி கருத்துகளுக்கு அதிபரான இவர், சொந்தக் கட்சியினரையும் விட்டுவைக்காமல் அட்டாக் செய்வதில் வல்லவர். சமயங்களில் இவர் செய்யும் அட்டாக்கைப் பார்க்கும்போது ‘சுவாமி, பா.ஜ.க-வில் இருக்கிறாரா, எதிர்க்கட்சியில் இருக்கிறாரா’ என்றெல்லாம் சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது! அவரது கடந்தகால ‘அட்டாக்’குகளில் சிலவற்றை இங்கே பார்ப்போம்...

“பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவருவது நாட்டில் கிளர்ச்சிச் சூழலை உருவாக்கிவருகிறது. இப்படிச் செய்வது நிதியமைச்சகத்தின் அறிவுத் திவால். தேச விரோதமும்கூட. இந்த விலைகளை உயர்த்துவதன் மூலம் பட்ஜெட் பற்றாக்குறைக்கு நிதியளிப்பது முற்றிலும் திறமையின்மை!”

சுப்பிரமணியன் சுவாமி அட்டாக்ஸ்!

“பிரதமர் மோடிக்கும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் பொருளாதாரம் தெரியாது. பொருளாதாரம் சரிவடைந்தாலும் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது!”

“பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கை விஷயங்களில் நான் பிரதமர் மோடியின் கொள்கைகளுக்கு எதிரானவன். அது குறித்து பொறுப்பான எவருடனும் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். பங்கேற்பு ஜனநாயகம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மோடி இந்தியாவின் ராஜா அல்ல!”

“மோடி அரசில் பொருளாதாரம் - தோல்வி, எல்லைப் பாதுகாப்பு - தோல்வி, வெளியுறவுக் கொள்கை - ஆப்கானிஸ்தான் தோல்வி, தேசியப் பாதுகாப்பு - பெகாசஸ் விவகாரம், உள்நாட்டுப் பாதுகாப்பு - காஷ்மீர் இருள்... இவையெல்லாம் யார் பொறுப்பு?”

சுப்பிரமணியன் சுவாமி அட்டாக்ஸ்!

“ஜி.எஸ்.டி என்பது 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம். இந்த ஜி.எஸ்.டி மிகவும் சிக்கலானது. இதற்காக எந்தப் படிவத்தை, எங்கு நிரப்புவது என்பது யாருக்கும் தெரியவில்லை... ராஜஸ்தானில் உள்ள ஒருவர், ‘எங்களுக்கு மின்சாரம் இல்லை, அதை எப்படிப் பதிவேற்றுவது?’ என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான், ‘அதை உங்கள் தலையில் பதிவேற்றி பிரதமரிடம் கேளுங்கள்’ என்று கூறினேன்!”

“ராஜ்நாத் சிங் சி.ஏ.ஏ எதிர்ப்பு வன்முறையைச் சமாளிக்க, ராணுவத்தை அழைக்க வேண்டும் என்று அமித் ஷாவுக்கு அறிவுறுத்த வேண்டும். அமித் ஜி அதற்கு ஒப்புக்கொண்டால், அது நமது ஜனநாயக பாரம்பர்யத்துக்கு அடியாகும். இருந்தும், இந்த வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவது நமது ஜனநாயகம் நீடிக்க முக்கியமானது!”

“விவசாயிகள், ராகுல் பாபாவிடம் விவசாயிகளின் தர்ணாவில் கலந்துகொள்ளும்படி கேட்டனர். ஆனால், அவரோ அவரின் பாட்டியை நினைவுகூர்ந்தார்!”

“அமெரிக்கர்கள் ஆங்கில மொழிப் பயன்பாட்டை உலகமயமாக்கியதால், நாம் அனைவரும் தற்காலிகமாக ஆங்கிலம் பேசிவருகிறோம். ஆனால், இன்னும் 50 ஆண்டுகளில் சம்ஸ்கிருதம் ஆங்கிலத்தை மாற்றிவிடும்!”

சுப்பிரமணியன் சுவாமி அட்டாக்ஸ்!

(ஏர் இந்தியா பங்கு விற்பனை பற்றி) “இந்த ஒப்பந்தம் முற்றிலும் தேச விரோதமானது. இதற்காக நான் நீதிமன்றம் செல்வேன். நமது குடும்பச் சொத்தை விற்க முடியாது!”

“பட்ஜெட் பற்றாக்குறையாக இருப்பதால், நமது அரசை ஏன் ஏலம் விடக் கூடாது?”

“11 முதல்வர்கள் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை எதிர்த்து நீதிமன்றத்தை நாடவேண்டிய அவசியம் என்ன? முதல்வர்களுக்கு அதிகாரம் இல்லையா?”

“திராவிடம் என்று சொல்லிவந்தார் கருணாநிதி. ஆனால், அவர் பெயரிலிருக்கும், ‘கருணா’ என்ற சொல் சம்ஸ்கிருதத்திலிருந்து வந்தது. ‘நிதி’ என்று சொல்லும் சம்ஸ்கிருத வார்த்தைதான். தி.மு.க-வின் சின்னமான ‘உதயசூரியன்’ என்ற வார்த்தையும் சம்ஸ்கிருதம்தான்!”

சுப்பிரமணியன் சுவாமி அட்டாக்ஸ்!

“சேது சமுத்திரத் திட்டத்தை யாராலும் தொட முடியாது... அது முடிவுக்கு வந்துவிட்டது. அதேபோல, ‘ஒரே நாடு... ஒரே தேர்தல்...’ திட்டமும் நடக்காது; அதற்கு வாய்ப்பு இல்லை!”

(2019-ல் நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி...) சினிமா கூத்தாடிகள் தமிழகத்துக்கு எதுவும் செய்யப்போவதில்லை. படம் வெளிவரும்போது விளம்பரத்துக்காகப் பேசுவார்கள். ‘வருகிறேன்... வருகிறேன்’ என்று அவர் பலமுறை கூறிவருகிறார். ஆனால், இதுவரை ஏதும் நடந்தபாடில்லை!”

சுப்பிரமணியன் சுவாமி அட்டாக்ஸ்!

(2019-ல் வெங்காய விலை உச்சம் தொட்டபோது நிருபர்களின் கேள்விக்கு...) “இதை நிர்மலா சீதாராமனிடம்தான் கேட்க வேண்டும். நான் நிறைய பொருளாதார புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனை ஆகிவருகின்றன. ஆனால், நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் புரிய வேண்டுமே!”

“ஓ.பி.எஸ் ஒரு சாதாரண மனிதர். அவரால் ஐந்து எம்.எல்.ஏ-க்களைக்கூட உருவாக்க முடியாது!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism