Published:Updated:

அரசியலமைப்புச் சட்டத்தில் ‘சோஷலிசம்‘, ‘செக்யூலரிசம்’... சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தது ஏன்?

சுப்பிரமணியன் சுவாமி

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரிமையில் இடம்பெற்றுள்ள சோஷலிசம், செக்யூலரிசம் என்ற வாசகங்களை நீக்க வேண்டுமென்று சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பதன் பின்னணி என்ன?

அரசியலமைப்புச் சட்டத்தில் ‘சோஷலிசம்‘, ‘செக்யூலரிசம்’... சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தது ஏன்?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரிமையில் இடம்பெற்றுள்ள சோஷலிசம், செக்யூலரிசம் என்ற வாசகங்களை நீக்க வேண்டுமென்று சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பதன் பின்னணி என்ன?

Published:Updated:
சுப்பிரமணியன் சுவாமி

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற சங் பரிவார் முயற்சி செய்துவருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டிவருகிறார்கள். இந்த நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் இடம்பெற்றிருக்கும் சோஷலிசம், மதச்சார்பின்மை ( secularism) என்ற வாசகங்கள் நீக்கப்பட வேண்டும் என்று பா.ஜ.க-வின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

திருமாவளவன்
திருமாவளவன்

அதை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யவிருப்பதாக தொல்.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான பினாய் விஸ்வம் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றிருக்கும் சோசலிசம், செக்யூலரிசம் ஆகிய வாசகங்களின் முக்கியத்துவம் குறித்து மூத்த வழக்கறிஞர்களிடம் பேசினோம்... `சோஷலிசம் என்பது பொதுவுடைமைக் கோட்பாடு. இந்தக் கோட்பாட்டின்படி, ஒரே இடத்தில் வளங்கள் குவியாது. செக்யூலரிசம் என்பது மதச்சார்பின்மை. மக்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. கலாசார சுதந்திரமும், மொழிச் சுதந்திரமும் அனைவருக்கும் உண்டு என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது.

மத நம்பிக்கை அற்றவர்களின் கருத்துகளுக்கும் இங்கு இடம் உண்டு. மதம், மதம் சார்ந்த நம்பிக்கை அரசின் செயல்பாடுகளில் குறுக்கிடக் கூடாது. இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்க மதச்சார்பின்மை கொள்கை இன்றியமையாதது. சோசலிசம்,செக்யூலரிசம் ஆகிய வாசகங்கள் அவசரநிலைக் காலத்தில் இந்திரா காந்தி தலைமையிலான ஆட்சியின்போது அரசியலமைப்பு சட்டத்தில் இணைக்கப்பட்டன. இந்த வாசகங்களை தான் நீக்க வேண்டுமென்று சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்’ என்கிறார்கள்.

முத்தரசன்
முத்தரசன்

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனிடம் பேசினோம். “மனித சமூகத்தில் சோஷலிசம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இந்தியா, பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமுள்ள நாடு. இந்த ஏற்றத்தாழ்வைக் களைய சோசலிசம் அவசியம். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே ரேஷன் கார்டு என்று இருப்பதைவிட, ‘ஒரே நாடு... அனைவருக்கும் ஒரே வாழ்வு’ என்று இருப்பது முக்கியம்.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் என அனைத்து மதத்தினருக்கும் இந்த நாடு பொதுவானது என்பதை செக்யூலரிசம் வலியுறுத்துகிறது. சோஷலிசம் செக்யூலரிசம் என்ற இரண்டு வார்த்தைகளை நீக்க வேண்டுமென்று சுப்பிரமணியன் சுவாமி சொல்கிறார். அப்படியென்றால், ஜனநாயகத்தை அவர் விரும்பவில்லை... சர்வதிகாரத்தையே அவர் விரும்புகிறார் என்பது தெரிகிறது” என்றார் முத்தரசன்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இது குறித்து பா.ஜ.க-வின் மாநில துணைத்தலைவரான நாராயணன் திருப்பதியிடம் பேசியபோது, “டாக்டர் அம்பேத்கர் இயற்றிய அரசியல் அமைப்புச் சட்டத்தில், சோஷலிசம், செக்யூலரிசம் என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை . அதனால் அந்த வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்” என்பதோடு முடித்துக்கொண்டார்.

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான ஆளூர் ஷா நவாஸிடம் பேசினோம். ``மத்திய பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் இடஒதுக்கீட்டுக்கும் தொழிலாளர் நலன்களுக்கும், தலித் சமூகத்தினருக்கும் அரசியலமைப்புச் சட்டத்துக்கும் ஆபத்து ஏற்படப்போகிறது என்று எங்கள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எச்சரித்தார். அது குறித்து அவர் மிகவும் கவலைப்பட்டார். அவர் எச்சரித்தது போலவே இப்போது நடந்துகொண்டிருக்கிறது. தனது மதவாத ஆதிக்கத்தை அரசியலமைப்பு சட்டத்திலும் திணிக்க பா.ஜ.க முயற்சி செய்கிறது.

சட்டப்பேரவையில் ஆளூர் ஷாநவாஸ்
சட்டப்பேரவையில் ஆளூர் ஷாநவாஸ்

சோஷலிசம், செக்யூலரிசம் என்ற வார்த்தைகளைக் கொண்ட 42-வது சட்டத் திருத்தம் அரசியல் அமைப்பு சட்டத்தின் சாராம்சத்தைப் பிரதிபலிக்கிறது. நாட்டை ஒற்றுமைப்படுத்த ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்தால், அதனை வரவேற்க வேண்டுமே தவிர, அவற்றை நீக்கச் சொல்லி மனுப் போடக்கூடாது. இந்த மனுவை எதிர்ப்பதில் எங்கள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உறுதியாக இருக்கிறார்” என்றார் ஆளூர் ஷாநவாஸ்.