Published:Updated:

``சிறையில் அச்சுறுதல்; ஆம் ஆத்மிக்கு எதிரான புகார் குறித்து உடனே சிபிஐ விசாரிக்க வேண்டும்!" - சுகேஷ்

சுகேஷ் சந்திரசேகர்

சிறையில் அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதால் உடனே ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான புகார் குறித்து சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும் என்று சுகேஷ் சந்திரசேகர் டெல்லி ஆளுநருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

``சிறையில் அச்சுறுதல்; ஆம் ஆத்மிக்கு எதிரான புகார் குறித்து உடனே சிபிஐ விசாரிக்க வேண்டும்!" - சுகேஷ்

சிறையில் அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதால் உடனே ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான புகார் குறித்து சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும் என்று சுகேஷ் சந்திரசேகர் டெல்லி ஆளுநருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

Published:Updated:
சுகேஷ் சந்திரசேகர்

மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சுகேஷ் சந்திரசேகர், ஆம் ஆத்மி கட்சியில் அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயினுக்கு ரூ.50 கோடி கொடுத்ததாக சமீபத்தில் புகார் தெரிவித்து டெல்லி ஆளுநருக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு ஆம் ஆத்மி கட்சி மறுப்பு தெரிவித்துவந்த நிலையில், சுகேஷ் சந்திர சேகர் மேலும் ஒரு கடிதத்தை இரண்டு நாள்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். அதில், ``கெஜ்ரிவால் ஜி, ஆம் ஆத்மி கட்சியில் சீட் வாங்க ரூ.500 கோடி கொடுக்கக்கூடிய 20 முதல் 30 பேரை அழைத்து வரும்படி என்னை ஏன் கட்டாயப்படுத்தினீர்கள்... என்னிடம் ரூ.50 கோடியை ஏன் வாங்கிக்கொண்டு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி கொடுப்பதாகத் தெரிவித்தீர்கள். சிறை நிர்வாகம் சார்பாக எனக்கு அச்சுறுத்தல் கொடுத்துவருகின்றனர். இதை கெஜ்ரிவாலும் சத்யேந்தர் ஜெயினும் உடனே நிறுத்திக்கொள்ளுங்கள்.

கெஜ்ரிவால்
கெஜ்ரிவால்

உங்கள் மீதான எனது குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து பின்வாங்க மாட்டேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

நேற்று மீண்டும் டெல்லி ஆளுநருக்கு சுகேஷ் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். ``அதில் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான எனது குற்றச்சாட்டு குறித்து உடனே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். எனக்கு நெருக்கடி அதிகரித்துவருகிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் முன்பு ஏதாவது அசம்பாவிதம் நடக்கலாம். எனவே, உடனே இந்தப் புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சிறையில் இருக்கும் சத்யேந்தர் ஜெயின், போலீஸ் அதிகாரி சந்தீப் கோயல் ஆகியோர் மூலம் எனக்கு அச்சுறுத்தல் அதிகரித்திருக்கிறது. இரண்டு நாள்களுக்கு முன்பு மீடியாவுக்கு வெளியிட்ட கடிதத்துக்குப் பிறகு சிறையில் எனக்கு அச்சுறுத்தல் அதிகரித்துவிட்டது. எனது குற்றச்சாட்டுக்குத் தேவையான ஆதாரங்களைக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். உண்மையை மறைக்க முடியாது. எனக்குச் சிறையில் துன்புறுத்தல் அதிகரித்திருக்கிறது. நேர்மையான அரசு என்று கூறிக்கொள்பவர்களுக்கு எதிரான ஊழல் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. சிறையில்கூட உயர்மட்ட ஊழலில் ஈடுபட்டுள்ளனர்" என்று தெரிவித்திருக்கிறார்.

சுகேஷ்
சுகேஷ்

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை அர்விந்த் கெஜ்ரிவால் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்திருக்கும் பேட்டியில், ``எங்கள் கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டு கற்பனையானது. குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்தது மற்றும் குஜராத் தேர்தலையொட்டி மக்களை திசைதிருப்ப இது போன்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளனர். குஜராத் தேர்தலைக் கண்டு அவர்கள் (பாஜக) அச்சமடைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக குஜராத்துக்கு எதையும் செய்யவில்லை" என்று தெரிவித்தார்.