தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர், பேராசிரியர் சுந்தரவள்ளி. இவர், பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி ஆபாசமாகச் சித்திரித்து பாலியல்ரீதியாகத் துன்புறுத்தல் கொடுப்பதாக அண்மையில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். சுந்தரவள்ளியை அவமதிக்கும் வகையில், சமூக வலைதளங்களில் சுற்றிக்கொண்டிருந்த பொய்யான பிரசாரங்களை எதிர்த்து, பல்வேறு அமைப்புகளும் தனிநபர்களும் தங்களுடைய கண்டனத்தைப் பதிவு செய்துவருகின்றனர். பெண்கள் மீது தொடரும் சைபர் தாக்குதல்கள் குறித்தும், இதன் பின்னணி அரசியல் குறித்தும் சுந்தரவள்ளியிடம் பேசினோம்.

‘‘உங்கள் மீதான சைபர் தாக்குதல்கள் எப்போதிலிருந்து தொடங்கின?’’

‘‘நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்புதான் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுக்கத் தொடங்கினேன். வாசிப்பு அனுபவமும் இடதுசாரிச் சிந்தனைகளும் இருப்பதால் தவறுகளை வரலாற்று உதாரணங்களோடு சுட்டிக்காட்டுவேன். ஒருகட்டத்தில் என்னை கருத்தியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாததால், பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் பாலியல்ரீதியாகத் தாக்கத் தொடங்கினர். நாம் தமிழர் கட்சியும் இதில் ஈடுபடத் தொடங்கியது. கறுப்புச் சட்டை அணிந்திருந்த காரணத்தினாலேயே நான் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவள் என்றும், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த முற்போக்குப் பெண்கள் என்றாலே, பண்பாட்டைச் சிதைப்பவர்கள் என்ற போர்வையில் என்மீதான தாக்குதல்கள் தொடங்கின. அதன் நீட்சியாகவே இந்தத் தாக்குதலும் நடந்திருக்கிறது.’’

‘‘கருத்தியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் என்று, ‘நாம் தமிழர்’ கட்சியைச் சொல்லக் காரணம் என்ன?’’

‘‘அந்தக் கட்சியின் கொள்கை மற்றும் சித்தாந்தங்களின் மீது நமக்கு நூறு சதவிகித விமர்சனப் பார்வை உண்டு. தமிழ்த் தேசியம் என்ற பெயரில் சாதியைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். மற்ற சித்தாந்தங்களையும் அதன் பெயரால் காலில் போட்டு மிதிக்கிறார்கள். அதுதான் அவர்களுடைய சித்தாந்தம் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால், எந்த ஒரு கொள்கைவாதியாலும் சகபெண்ணை பாலியல்ரீதியாகத் தாக்க முடியாது. நாம் தமிழர் கட்சியினர் அவர்களுடைய கொள்கைகள் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது.’’

‘‘இதுகுறித்து அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் முறையிடப்பட்டதா, ஏதேனும் நடவடிக்கை எடுத்தார்களா?’’

‘‘சீமான், எனக்கு 18 வருடங்களாக நட்புரீதியிலான பழக்கம். நாம் தமிழர் கட்சியும், திராவிட முற்போக்குச் சிந்தனையுடைய இயக்கங்களும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்றுதான் நாங்கள் இதுநாள் வரை நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் நானும் என் மகனும் இருக்கும் படத்தை, சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் ஆபாசக் கருத்துகளுடன் அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் பதிவிட்டார்கள். இதுபற்றி தகுந்த நடவடிக்கை எடுக்கச் சொல்லி, நான் சீமானுக்குச் செய்தி அனுப்பினேன். ஆனால், அதற்குத் தீர்வு காணப்படாமல் அடுத்த கட்டமாகப் பிரச்னை நகர்ந்தது. அவர்களுடைய கட்சியின் வேட்பாளர் காளியம்மாளை எனக்கு எதிரான ஆயுதமாகத் திருப்பினார்கள். அவர் தன் மேடைப்பேச்சுகளில் என்னைத் தாக்கிப் பேசத் தொடங்கினார். பிரச்னைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என அந்தக் கட்சியினரே விரும்பவில்லை.’’

‘‘ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வில் இருக்கும் ஒற்றுமை, கொள்கைரீதியாக வலுவாக இருக்கும் இடதுசாரிகளிடம் இல்லை என, கருத்து நிலவுகிறதே?’’

‘‘வலதுசாரிகள், தலைமைப் பீடத்தின் சொல் கேட்டு நடப்பவர்கள். தலைமை எதைச் சொல்கிறதோ அதை மையப்படுத்தித்தான் மிலிட்டரி கட்டுப்பாட்டுடன் இயங்குகிறார்கள். ஆனால், முற்போக்கு இயக்கங்கள் அப்படியல்ல. நாங்கள் ஜனநாயகரீதியில் கேள்விகளை முன்வைப்பவர்கள். அதன் வழியாக ஜனநாயகத்தை உறுதிப்படுத்துகிறவர்கள். கேள்விகள்தான் இயக்கக் கட்டமைப்பை வலுவாக்கும். மிலிட்டரி கட்டுப்பாடு அல்ல.’’

‘‘ஆனால், உங்கள்மீதான இந்தத் தாக்குதலுக்கு இடதுசாரி இயக்கத் தலைவர்கள் பெரிதாகக் குரல் கொடுக்கவில்லையே?’’

‘‘த.மு.எ.க.ச அறிக்கை வெளியிட்டது. பெரிய கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் தொலைபேசியில் விசாரித்தார்கள். நான் காவல்துறையிடம் புகார் கொடுக்கச் சென்றபோதுகூட, நூற்றுக்கணக்கான பெண்கள் வந்திருந்தார்கள். அவர்களில் பலர் எனக்குப் பழக்கம் கிடையாது. அது பெரிய பலமாக இருந்தது. இவை தவிர, சி.பி.ஐ., அனைத்து பெண்கள் கூட்டமைப்பு, புதிய பொதுவுடைமைக் கட்சி, மக்கள் மன்றம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இணைந்து புகார் கொடுத்திருக்கிறார்கள்.’’

‘‘பேரலையாக எழுந்த ‘மீ டு’ பிரச்னைகூட அப்படியே அடங்கிவிட்டது. இதுபோன்ற சமூக வலைதளப் பாலியல் தாக்குதல்களுக்கு என்னதான் தீர்வு?’’

‘‘சைபர் குற்றங்களைப் பொறுத்தவரை, காவல்துறை சைபர்போலத்தான் இயங்கிவருகிறது. ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கும்பல்களின்மீது தாக்குதல் நடத்தப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழிசை தாக்கப்பட்டாலோ, அவரைத் தவறாகப் பேசப்பட்டாலோ கிளர்ந்தெழுந்து நடவடிக்கை எடுக்கிறார்கள். அதுவே மற்ற பெண்கள் என்றால் அலட்சியம் ஏனோ? நான்கு வருடங்களில் கொடுக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட புகார்களில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. அரசியல் சார்ந்த பயிற்சி இருப்பதால், எங்களால் வலுவாக எதிர்கொள்ள முடிகிறது. சாமானியப் பெண்களின் நிலை என்ன என யோசித்துப் பாருங்கள்.’’