Election bannerElection banner
Published:Updated:

`அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தால் தோல்வி' - மூடநம்பிக்கையை உடைத்து வெற்றிபெற்ற திமுக வேட்பாளர்கள்!

சரவணக்குமார்
சரவணக்குமார்

இதைச் செய்தாலோ, இப்படி இருந்தாலோ அந்த வேட்பாளர் வெற்றிபெற மாட்டார்… மோசமாகத் தோல்வியடைவார்… போன்ற மூடநம்பிக்கைப் பேச்சுகள், மக்களிடம் உலாவருகின்றன. அதை உடைத்தெரிந்துள்ளனர் தி.மு.க வேட்பாளர்கள்!

தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை பல்வேறு அரசியல் மூடநம்பிக்கைகள் மக்களிடமும், அரசியல் கட்சியினரிடமும் நிலவுகின்றன. உதாரணமாக, பெரியகுளம் (தனி) தொகுதியைப் பொறுத்தவரை, பெரியகுளம் நகரிலுள்ள அண்ணா சிலைக்கு வேட்பாளர்கள் யார் மாலை அணிவித்தாலும், அவர்கள் தேர்தலில் தோல்வியடைந்துவிடுவார்கள் எனப் பெரியகுளம் மக்களிடமும், அரசியல் கட்சியினரிடமும் பரவலாக பேச்சு ஒன்று அடிபட்டுக்கொண்டிருந்தது.

அண்ணா சிலை
அண்ணா சிலை
`அண்ணா சிலையைப் பார்த்து அஞ்சுகிறார்களா அ.தி.மு.க-வினர்?’ - பெரியகுளம் தேர்தல் சென்டிமென்ட்

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பெரியகுளம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் மயில்வேல், தனது பிரசாரத்தைத் தொடங்கியபோது அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பதைத் தவிர்த்தார். ஆனால், தி.மு.க வேட்பாளரான சரவணக்குமார் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு தனது பிரசாரத்தைத் தொடங்கினார். இதனால், அவர் தேர்தலில் தோல்வியடைந்துவிடுவார் என மக்களிடம் பரவலாகப் பேச்சு அடிபட்டது. ஆனால், அந்தத் தேர்தலில் சரவணக்குமார் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்தநிலையில், தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் சரவணக்குமார் தி.மு.க சார்பில் போட்டியிட்டார். இப்போது, அண்ணா சிலைக்கு அவர் மாலை அணிவிக்க, `இந்த முறை கண்டிப்பாக சரவணக்குமார் தேர்தலில் தோல்வியடைவார்’ என அ.தி.மு.க-வினர் கூறினர். ஆனால், சரணக்குமார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க-வின் முருகனை வீழ்த்தினார்.

ஐ.பி.செந்தில்குமார்
ஐ.பி.செந்தில்குமார்
பழநி: செல்போனுக்குத் தடை... ஆன்லைனில் முன்பதிவு! - 8 மாதங்களுக்குப் பிறகு தொடங்கியது வின்ச் சேவை

பெரியகுளம் அண்ணா சிலை சென்டிமென்ட் ஒருபுறம் என்றால், திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதியில் வேறுவிதமான மூட நம்பிக்கை உள்ளது. இதுவரை பழநி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நபர், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றதாக வரலாறு இல்லை. அப்படிப் போட்டியிட்டாலும், அவர்கள் படுதோல்வியைச் சந்திக்க நேரிடும் எனவும் பழநி தொகுதி அரசியல் கட்சியினர் மத்தியில் பல ஆண்டுகளாக மூடநம்பிக்கை நிலவிவருகிறது.

பழநி
பழநி

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பழநி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமார், இந்த முறையும், தி.மு.க சார்பில் களம் இறக்கப்பட்டார். இதை அறிந்த பழநி தொகுதி மக்கள், செந்தில்குமார் வெற்றிபெறுவது மிகவும் கடினம் எனப் பேசிக்கொண்டனர். இந்தத் தகவல் செந்தில்குமார் காதுகளுக்கும் எட்டியது. ஆனால், தேர்தல் பணிகளில் தீவிரம்காட்டிய செந்தில், தனக்கு எந்தெந்தப் பகுதிகள் பலவீனமாக உள்ளன எனக் கண்டறிந்து, அங்கு கவனம் செலுத்தினார். அதன் விளைவாக, தற்போது, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க-வின் ரவி மனோகரனைவிட 29,561 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார் . இதனால், பல ஆண்டுகளாக நிலவிவந்த பழநி மூடநம்பிக்கை உடைத்தெறியப்பட்டிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு