Published:Updated:

``பாஜக-விடமிருந்து இந்தியாவைக் காக்க யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு தாருங்கள்!'' - கே.டி.ராமராவ்

கே.டி.ராமராவ் ( ட்விட்டர் )

எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு அளிக்குமாறு டி.ஆர்.எஸ் செயல் தலைவர் கே.டி.ராமராவ் கூறியிருக்கிறார்.

``பாஜக-விடமிருந்து இந்தியாவைக் காக்க யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு தாருங்கள்!'' - கே.டி.ராமராவ்

எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு அளிக்குமாறு டி.ஆர்.எஸ் செயல் தலைவர் கே.டி.ராமராவ் கூறியிருக்கிறார்.

Published:Updated:
கே.டி.ராமராவ் ( ட்விட்டர் )

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரௌபதி முர்மு கடந்த வெள்ளியன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதையொட்டி, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட யஷ்வந்த் சின்ஹா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

திரௌபதி முர்மு, மோடி
திரௌபதி முர்மு, மோடி

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களிடத்தில் பேசிய டி.ஆர்.எஸ் செயல் தலைவர் கே.டி.ராமராவ், ``வருகிற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவளிக்க வேண்டும். மோடி அரசு தொடர்ச்சியான ஜனநாயக விரோத முடிவுகளை எடுத்து மக்களுக்கு அநீதி இழைத்தது.

கடந்த 8 ஆண்டுகளில் பழங்குடியின மக்களின் நலனுக்காக பா.ஜ.க எதையும் செய்யவில்லை. பழங்குடியினர் அல்லது அவர்களின் வளர்ச்சி குறித்து பா.ஜ.க-வுக்கு எந்த அக்கறையும் கிடையாது. பா.ஜ.க-வின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கும், எனக்கும் தனிப்பட்ட விரோதமோ, எதிர்ப்போ இல்லை. பா.ஜ.க-விடமிருந்து இந்தியாவைக் காக்க யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு கொடுங்கள்'' என்று தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!