Published:Updated:

``மொழிக்காக முதலில் வருபவர்கள் தமிழர்கள்” - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா

சென்னை உயர் நீதிமன்ற விழா ( ட்விட்டர் )

``தமிழர்கள் மொழி அடையாளம் மிக்கவர்கள்" என சென்னை உயர் நீதிமன்ற விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

``மொழிக்காக முதலில் வருபவர்கள் தமிழர்கள்” - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா

``தமிழர்கள் மொழி அடையாளம் மிக்கவர்கள்" என சென்னை உயர் நீதிமன்ற விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

Published:Updated:
சென்னை உயர் நீதிமன்ற விழா ( ட்விட்டர் )

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றக் கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டுதல், திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், ``உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தமிழகத்திற்கு வந்ததில் பெருமை கொள்கிறேன். நீதித்துறையில் நாட்டு மக்களின் நம்பிக்கையாக திகழ்கிறார். சட்டத்தின் குரலாக மட்டுமல்லாமல் மக்களின் குரலாகவும் விளங்குகிறார். சென்னையில் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும். தமிழை நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்'' என்றார்.

சென்னை உயர்நீதிமன்ற விழா
சென்னை உயர்நீதிமன்ற விழா

இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``சென்னை வழக்கறிஞர்கள் நீதித் துறையை வலுப்படுத்தும் பணிகளில் முக்கிய பங்காற்றியிருக்கின்றனர். தமிழர்கள் மொழி அடையாளம் மிக்கவர்கள். மொழிக்காக எப்போதும் முதலில் வருபவர்கள். நீதிமன்றம் தங்கள் உரிமையை பாதுகாக்கும் என மக்கள் நம்புகின்றனர், மக்களின் நம்பிக்கையை நீதித்துறை பூர்த்திசெய்யும். நீதிபதியாக வர பகுதி, இனம், மொழி உள்ளிட்டவைகள் தடையாக இருக்க கூடாது. மிகவும் பின்தங்கிய பகுதியில் இருந்து வரும் நீதிபதிகளால் தான் மக்களின் பிரச்னையை சரியாக புரிந்துகொண்டு அதில் தீர்வு காண முடியும்.

உள்ளூர் மொழிகளை பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. அதனால் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி மாநில மொழிகளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும். வழக்கறிஞர்களின் நலனுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism