Published:Updated:

``நான்கு மாதக் குழந்தை போராடுமா?"- அரசிடம் விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

முகமது ஆரிஃப் மற்றும் நசியா தம்பதியின் மகன் முகமது ஜஹான்கான் ( Rohit Bapat twitter page )

`நான்கு மாதக் குழந்தை போராட்டம் நடத்துமா?' என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்

``நான்கு மாதக் குழந்தை போராடுமா?"- அரசிடம் விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

`நான்கு மாதக் குழந்தை போராட்டம் நடத்துமா?' என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்

Published:Updated:
முகமது ஆரிஃப் மற்றும் நசியா தம்பதியின் மகன் முகமது ஜஹான்கான் ( Rohit Bapat twitter page )

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தில் பங்கேற்ற 4 மாதக் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில், மத்திய அரசுக்கும் டெல்லி அரசுக்கும் விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள `ஷாகீன் பாக்' பகுதியில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இளையோர், முதியோர் உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். அதன் ஒருபகுதியாக முகமது ஆரிஃப் மற்றும் நசியா தம்பதியின் மகன் முகமது ஜஹான்கான் என்ற நான்கு மாதக் குழந்தையும் போராட்டத்தில் பங்கேற்றிருந்தான்.

ஷாகீன் பாக் பகுதியில் போராட்டம்
ஷாகீன் பாக் பகுதியில் போராட்டம்
விகடன்

கடும் குளிரிலும் தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்ற அந்தக் குழந்தை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தான். இந்த நிலையில், கடந்த ஜனவரி 30-ம் தேதி இரவு கடுமையான குளிர் காரணமாகக் காய்ச்சல் ஏற்பட்டு முகமது ஜஹான்கான் உயிரிழந்தான். இந்தச் சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில், நான்கு மாதக் குழந்தையைப் போராட்டத்துக்கு அழைத்துச் சென்றது தவறு என்று குழந்தைகள் உரிமைகள் செயற்பாட்டாளர்கள் பலரும் கொதித்தனர். இதற்கிடையில், இது தொடர்பாக 12 வயதில் `தேசிய துணிச்சல் விருது' வென்ற ஜென் குன்ரதன் சதவர்த்தே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்தக் கடிதத்தில், ``நான்கு மாதக் குழந்தை இறந்துவிட்டதைக் கண்டபோது, ​​மிகுந்த மன வேதனையுற்றேன். எவ்வளவு பெரிய கொடூரம் அந்தக் குழந்தைக்கு இழைக்கப்பட்டுள்ளது. இயற்கைக்கு மாறாக அந்தக் குழந்தையின் உரிமை முழுவதுமாகப் பறிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழந்தை எப்படி தனக்குள்ள பிரச்னையை வெளிப்படுத்தும் என்பது அந்தப் பெற்றோருக்குத் தெரியாமல் போனது?

ஜென் குன்ரதன் சதவர்த்தே தேசிய துணிச்சல் விருது வென்றவர்
ஜென் குன்ரதன் சதவர்த்தே தேசிய துணிச்சல் விருது வென்றவர்
என் .டி.வி

இப்படியான தவறுகள் இனியும் நடைபெறாமல் தடுக்க வேண்டும். மேலும், தவறிழைத்த அந்தப் பெற்றோர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும்" என்று கூறியுள்ளார். அதோடு "இது வெறும் பெற்றோர், குழந்தை என்ற இருவர் மட்டும் தொடர்புடைய குற்றம் அல்ல. இப்படியான குற்றங்கள் நிகழ்வதற்கான காரணமாக அரசாங்கம் இருந்துள்ளது. எனவே, இதில் தொடர்புடைய மத்திய அரசும், டெல்லி அரசும் உரிய விளக்கத்தைத் தர வேண்டும்'' என்று அந்தக் கடித்ததில் ஜென் குன்ரதன் சதவர்த்தே கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த மனுவை ஏற்று தலைமை நீதிபதி விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் போராட்டக்காரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ``கிரெட்டா தன்பெர்க்கூட ஒரு எதிர்ப்பாளராக மாறியபோது குழந்தையாகத்தான் இருந்தார்'' என்று தனது வாதத்தை முன்வைத்தார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அதற்குத் தலைமை நீதிபதி, ``இந்த வழக்கிற்கு தொடர்பற்ற வாதங்களை வைக்கவேண்டாம். அவ்வாறு வைத்தால் விசாரணை ஒத்தி வைத்துவிடுவேன்'' என்று கூறினார். அதோடு, நான்கு மாதக் குழந்தை போராட்டம் நடத்துமா? என்றும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மத்திய அரசும், டெல்லி மாநில அரசும் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism