Published:Updated:

``வன்னியர் உள் இட ஒதுக்கீடு ரத்து செல்லும்!” - மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் உறுதி

`வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்துசெய்தது செல்லும்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

``வன்னியர் உள் இட ஒதுக்கீடு ரத்து செல்லும்!” - மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

`வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்துசெய்தது செல்லும்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

Published:Updated:
உச்ச நீதிமன்றம் உறுதி

கடந்த அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு சட்டத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்துசெய்திருந்தது. இதையொட்டி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மற்றும் பாமக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம்
வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம்

இந்த நிலையில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் அமர்வு, ``உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும், உள் இட ஒதுக்கீடு வழங்கும்போது அதற்கான சரியான, நியாயமான காரணங்களை அரசு கொடுக்க வேண்டும். வன்னியர் இட ஒதுக்கீடு சட்டம் அரசியல் சாசனத்தின் 14, 16 பிரிவுகளுக்கு விரோதமானது. வன்னியர்களை மட்டும் தனிப்பிரிவாகக் கருதுவதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை. சாதியை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு இட ஒதுக்கீடு வழங்க முடியாது'' என நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

வன்னியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவு செல்லும் எனத் தீர்ப்பளித்து, தமிழக அரசு தொடுத்திருந்த மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism