Published:Updated:

EWS: ``நூற்றாண்டுக்கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு" - தீர்ப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின்

ஸ்டாலின்

``இன்று வெளியாகியிருக்கும் தீர்ப்பு, சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டுக்கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியிருக்கிறது." - முதல்வர் ஸ்டாலின்

EWS: ``நூற்றாண்டுக்கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு" - தீர்ப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின்

``இன்று வெளியாகியிருக்கும் தீர்ப்பு, சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டுக்கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியிருக்கிறது." - முதல்வர் ஸ்டாலின்

Published:Updated:
ஸ்டாலின்

வேலைவாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் 10 சதவிகிதம், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு (EWS) இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்த வழக்கை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான ஐந்து நீதிபதிகள்கொண்ட அமர்வு விசாரித்ததில், மத்திய அரசின் சட்டத் திருத்தத்துக்கு மூன்று நீதிபதிகள் ஆதரவாகத் தீர்ப்பளித்தனர். அதேசமயம் தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லாது எனத் தீர்ப்பு வழங்கினர்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அதைத் தொடர்ந்து 3-2 என்ற அடிப்படையில் மத்திய அரசின் சட்டத் திருத்தம் தற்போது செல்லுபடியாகியிருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ``பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்று வெளியாகியிருக்கும் தீர்ப்பு, சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டுக்காலப் போராட்டத்தில் ஒரு பின்னடைவு" என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மேலும், ``பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்காக 2019-ம் ஆண்டு ஒன்றிய பா.ஐ.க அரசு கொண்டுவந்த இட ஒதுக்கீட்டு முறை சமூகநீதிக்கும் சமத்துவத்துக்கும் எதிராக அமையும் என்ற அடிப்படையில், இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தை தி.மு.க முன்னெடுத்து நடத்திவந்தது. இந்த வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டுக்கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியிருக்கிறது.

EWS பிரிவினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு
EWS பிரிவினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு

எனினும், தீர்ப்பை முழுமையாக ஆராய்ந்து, சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, சமூகநீதிக்கு எதிரானதான முன்னேறிய வகுப்பினருக்கான இந்த இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிரான நமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும். சமூகநீதியைக் காக்க, அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வைத்த தமிழ்நாடு மண்ணிலிருந்து, சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்" என ஸ்டாலின் கூறியிருக்கிறார்.