Published:Updated:

நுபுர் ஷர்மா விவகாரம்: ``உச்ச நீதிமன்றம் கூறியது தீர்ப்பல்ல..!"- மத்திய சட்ட அமைச்சர் பேட்டி

கிரண் ரிஜிஜு

`ஒருவேளை இத்தகைய தீர்ப்பு எனக்குப் பிடிக்கவிட்டாலோ அல்லது அவதானிப்புகள் செய்யப்பட்ட விதத்தில் எனக்குக் கடுமையான ஆட்சேபனை இருந்தாலும், நான் இதில் கருத்துகூற விரும்பவில்லை.' - கிரண் ரிஜிஜு

நுபுர் ஷர்மா விவகாரம்: ``உச்ச நீதிமன்றம் கூறியது தீர்ப்பல்ல..!"- மத்திய சட்ட அமைச்சர் பேட்டி

`ஒருவேளை இத்தகைய தீர்ப்பு எனக்குப் பிடிக்கவிட்டாலோ அல்லது அவதானிப்புகள் செய்யப்பட்ட விதத்தில் எனக்குக் கடுமையான ஆட்சேபனை இருந்தாலும், நான் இதில் கருத்துகூற விரும்பவில்லை.' - கிரண் ரிஜிஜு

Published:Updated:
கிரண் ரிஜிஜு

பா.ஜ.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, ஊடக விவாத நிகழ்ச்சியொன்றில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து கூறியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், இஸ்லாமிய நாடுகள் பலவும் இந்தியா மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கண்டனங்கள் தெரிவித்தன. அதுமட்டுமல்லாமல், நுபுர் ஷர்மாவைக் கைதுசெய்யக்கோரி இந்தியாவின் பல மாநிலங்களில் போராட்டங்களும் நடைபெற்றன.

இந்த நிலையில்தான், கடந்த செவ்வாயன்று ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில், நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டதாக டெய்லர் ஒருவர் தலைதுண்டித்துக் கொலைசெய்யப்பட்டார்.

நுபுர் ஷர்மா கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
நுபுர் ஷர்மா கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

இப்படியிருக்க, நுபுர் ஷர்மா தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ``நுபுர் ஷர்மாவின் கருத்து ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது. உதய்பூர் படுகொலை சம்பவத்துக்கும் அவர்தான் காரணம். நாட்டு மக்கள் அனைவரிடமும் நுபுர் ஷர்மா மன்னிப்பு கேட்கவேண்டும்" என கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், நுபுர் ஷர்மாமீதான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தீர்ப்பு அல்ல என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிரண் ரிஜிஜு
கிரண் ரிஜிஜு

தனியார் ஊடகத்திடம் நேற்று பேசிய கிரண் ரிஜிஜு, ``முதலில் ஒரு சட்ட அமைச்சர் என்ற முறையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் அவதானிப்புகள் குறித்து கருத்து தெரிவிப்பது சரியான முறையல்ல. மேலும், இது வெறும் வாய்மொழி அவதானிப்பு தானே தவிர தீர்ப்பல்ல. ஒருவேளை இத்தகைய தீர்ப்பு எனக்குப் பிடிக்கவிட்டாலோ அல்லது அவதானிப்புகள் செய்யப்பட்ட விதத்தில் எனக்குக் கடுமையான ஆட்சேபனை இருந்தாலும், நான் இதில் கருத்து கூற விரும்பவில்லை. நான் இது குறித்துப் பதிலளிக்க வேண்டும் என்கிறார்கள். இருப்பினும் இந்த பிரச்னையை பொருத்தமான இடத்தில் விவாதிப்போம்" எனக் கூறினார்.