Published:Updated:

ஜி ஜின்பிங் உருவத்துடன் பட்டுப் பொன்னாடை! - சிறுமுகையிலிருந்து ஒரு சர்ப்ரைஸ் பரிசு! #xijinping

அவருக்குக் கொடுக்கும் பரிசுகள் ஏராளம் என்றாலும், நெசவாளர்களின் இந்தப் பட்டுப் பொன்னாடை நிச்சயமாக அவரின் இதயத்தைத் தொடும். ஜி ஜின்பிங் உடன் சிறுமுகைப் பட்டும் சீனாவுக்குப் பயணப்பட இருக்கிறது.

ஜி ஜின்பிங்
ஜி ஜின்பிங்

மாமல்லபுரத்தில் நடக்கும் முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னைக்கு வருகை தந்திருக்கிறார். இது ஒரு வரலாற்று நிகழ்வு என்பதால், தமிழக அரசும் மத்திய அரசும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருக்கின்றன. கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன், ஒரு சில ஆச்சர்யப் பரிசுகளையும் அவருக்கு வழங்க ஏற்பாடு செய்திருக்கிறது தமிழக அரசு.

xi jinping
xi jinping

சீன அதிபர் ஜி ஜின்பிங் உருவம் பதித்த, சிவப்புப் பட்டுப் பொன்னாடை ஒன்று அவருக்காகத் தயார் நிலையில் இருக்கிறது. இந்தப் பட்டுப் பொன்னாடை கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள சிறுமுகையில் பட்டு நெசவாளர்களால் நெய்யப்பட்டிருக்கிறது. மிகவும் தத்ரூபமாகவும் அழகாகவும் நெய்யப்பட்டுள்ள இந்தப் பட்டுப் பொன்னாடை, கிளாஸிக் பட்டு நூல்களைக் கொண்டு நெய்யப்பட்டிருக்கிறது.

சீனாவின் தேசியக் கொடி சிவப்பு நிறம் என்பதால், இந்தப் பட்டுப் பொன்னாடையும் சிவப்பு நிறத்தில் நெய்யப்பட்டிருக்கிறது. பொன்னாடையின் மையத்தில் தங்கச் சரிகையில் ஜி ஜின்பிங் சிரித்த முகத்துடன் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அவருக்குக் கொடுக்கும் பரிசுகள் ஏராளம் என்றாலும், நெசவாளர்களின் இந்தப் பட்டுப் பொன்னாடை நிச்சயமாக அவரின் இதயத்தைத் தொடும். ஜி ஜின்பிங் உடன் சிறுமுகை பட்டும் சீனாவுக்குப் பயணப்பட இருக்கிறது.

Live Updates: `இரவு விருந்து; ஒரு மணிநேரத்துக்கும் மேலாக ஆலோசனை!' - மோடி - ஜி ஜின்பிங் முதல்நாள் சந்திப்பு நிறைவு

ஜி ஜின்பிங் உருவம் பதித்த பட்டுப் பொன்னாடை குறித்து, பல சுவாஸ்யமான தகவல்கள் இருக்கின்றன. ஆனால், அந்த தகவல்களை இப்போதைக்கு அதன் தயாரிப்பாளர்கள் வெளியிடவில்லை. தெரிந்துகொள்வதற்காக நாம் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினோம். ஒரு சில தினங்களில் முழுத் தகவல்களையும் வெளியிடுவதாகத் தெரிவித்தனர்.