அ.தி.மு.க எம்.பி-யின் லெட்டர்பேடில் மோடி படம்... மக்களின் ரியாக்ஷன் இதுதான்! #VikatanPollResults
அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத் குமாரின் மோடி படத்துடன் கூடிய லெட்டர்பேட் விவாதத்துக்குள்ளாகியிருந்தது. அதுகுறித்து விகடன் வாசகர்களிடம் சர்வே கேட்டிருந்தோம். அதன் முடிவுகள்..!

உள்துறை அமைச்சர் அமித் ஷா வடிவமைத்த சிறப்பு பாதுகாப்பு குழு (திருத்த) மசோதா-2019-ஐ ஆதரித்து அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத் குமார் பேசியிருந்தார். அதன் சாராம்சத்தை தனது அதிகாரபூர்வ லெட்டர் பேடிலும் செய்தியாக வெளியிட்டிருந்தார். அதன் மீதான விவாதங்கள் ஒருபுறமிருக்க அந்த லெட்டர்பேடில் அ.தி.மு.க பிரமுகர்களான ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் படங்களுடன் மோடியின் படமும் இடம்பெற்றது விமர்சனத்துக்குள்ளானது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என வாசகர்களிடம் பல்வேறு தளங்களில் கேட்டிருந்தோம். அந்தக் கேள்விகள்...
அ.தி.மு.க. எம்.பி ரவீந்திரநாத் லெட்டர் பேடில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோரின் படங்களுடன் மோடியின் படமும் இருப்பது...
- நல்ல பழக்கம்
- பிழைக்கத் தெரிந்தவர்
- அ.தி.மு.கவுக்கு அவமானம்
- அமித்ஷாவையும் சேர்க்கலாம்

இதற்கு பெரும்பாலான வாசகர்கள் `பிழைக்கத்தெரிந்தவர்' என்றே பதிலளித்துள்ளனர். வாசகர்கள் வெவ்வேறு தளங்களில் ஓ.பி.ஆருக்கு அளித்திருக்கும் சர்டிஃபிகேட் இதோ...
இதேபோல விகடன் தளத்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்...
ஹலோ தளத்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்...
மொத்தமாக அனைத்து தளங்களிலும் கிடைத்த முடிவுகளின் இறுதி விகிதம் இதுதான். இதில் அதிகபட்சமாக 39.35 பேர் `பிழைக்கத் தெரிந்தவர்' எனத் தெரிவித்துள்ளனர். அதற்கடுத்து 30.92 சதவிகிதம் பேர் `அ.தி.மு.கவுக்கு அவமானம்' எனத் தெரிவித்துள்ளனர்.
வாசகர்கள் பதிவுசெய்த சில கமென்ட்ஸ்...