Published:Updated:

காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட்; சூர்யா சிவாவுக்குத் தடை- சர்ச்சை ஆடியோ; அண்ணாமலை நடவடிக்கை- நடந்தது என்ன?

அண்ணாமலை | காயத்ரி ரகுராம் | சூர்யா சிவா

பா.ஜ.க பெண் நிர்வாகியை அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு ஆபாசமாகப் பேசியும், கொலை மிரட்டல் விடுத்தும் சூர்யா சிவா பேசியிருக்கும் ஆடியோ வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட்; சூர்யா சிவாவுக்குத் தடை- சர்ச்சை ஆடியோ; அண்ணாமலை நடவடிக்கை- நடந்தது என்ன?

பா.ஜ.க பெண் நிர்வாகியை அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு ஆபாசமாகப் பேசியும், கொலை மிரட்டல் விடுத்தும் சூர்யா சிவா பேசியிருக்கும் ஆடியோ வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
அண்ணாமலை | காயத்ரி ரகுராம் | சூர்யா சிவா

‘தி.மு.க-வில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை’ என தி.மு.க-விலிருந்து வெளியேறி பா.ஜ.க-வில் இணைந்தவர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. தற்சமயம் தமிழக பா.ஜ.க-வின் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக இருக்கிறார். பா.ஜ.க-வுக்குச் சென்ற பிறகு தி.மு.க தலைமையையும், தி.மு.க-வின் முக்கிய நபர்களையும் கடுமையாக விமர்சித்துப் பேசிவருகிறார். இதற்கிடையே பேருந்து கடத்தல் வழக்கு, பள்ளி அபகரிப்பு வழக்கு என அவரைச் சுற்றித் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்துகொண்டேயிருக்கின்றன. இந்த நிலையில், தமிழக பா.ஜ.க-வின் சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கும் டெய்சி சரணை அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு ஆபாசமாகப் பேசியும், அவருக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் சூர்யா சிவா பேசியிருக்கும் ஆடியோ ஒன்று வெளியாகி, பரவிவருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டெய்சி சரண்
டெய்சி சரண்

வெளியாகியிருக்கும் அந்த செல்போன் உரையாடலில் பேசும் சூர்யா சிவா, ``மாவட்டப் பொறுப்புல மைனாரிட்டிய போட முடியாமயே இவ்ளோ தாண்டுறியே… 68 சதவிகித ஓபிசி-யை வெச்சுக்கிட்டு... நாளைக்கு நான் என் சாதிகாரனை ஏவிவிடுறேன். நீ ஊர் தாண்ட முடியாது. உன் வீடு புகுந்து எல்லாத்தையும் வெட்டிப்புடுவேன்” எனத் தொடர்ச்சியாக கொலை மிரட்டல் விடுத்த சூர்யா சிவா, தொடர்ந்து பேசுகையில். ``நீ அண்ணாமலைகிட்ட போய்க்க. ஜே.பி.நட்டா, அமித் ஷா, மோடின்னு யார்கிட்ட வேணும்னாலும் போய்க்கோ. ஆனானப்பட்ட தி.மு.க-வுலயே ரெளடியிசம் பண்ணிட்டு வந்தவன் நான்’ எனக் கடுமையாகப் பேசியிருக்கிறார்.  

சூர்யா சிவா
சூர்யா சிவா
DIXITH

பா.ஜ.க-வில் பதவி வழங்குவது தொடர்பாக சூர்யா சிவாவுக்கும், டெய்சி சரணுக்கும் இடையே நடந்துவந்த மோதல், இந்த ஆடியோ மூலமாக அம்பலமாகியிருப்பதாகக் கூறுகின்றனர். இந்த விவகாரத்தை டெய்சி சரண் தரப்பு மாநிலத் தலைமைக்கு கொண்டு சென்று, சூர்யா சிவாவை அழைத்து விசாரணை நடத்தக் கோரியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, ‘சூர்யா சிவா பா.ஜ.க-வில் சேர்ந்து சில மாதங்களே ஆன நிலையில், யார் கொடுக்கும் தைரியத்தால் இப்படித் தொடர்ச்சியாகச் சர்ச்சைகளில் சிக்கியும் அடாவடியாக நடந்துவருகிறாரோ’ என பா.ஜ.க-வினரே கடும் அதிருப்தியில் இருக்கின்றனராம்.

இந்த விவகாரத்தில் காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்திருந்தார். அவர் தனது ட்விட்டர் பதிவில், `` சொந்தக் கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்... இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநிலப் பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு.

திமுக ஸ்லீப்பர் செல்கள்தான் நம்மைச் சேதப்படுத்துகின்றன. அவர்கள் தங்கள் திராவிட மாடலை இங்கே காட்டுகிறார்கள். இதை நான் கண்டிக்கிறேன். இந்த நபர்களை போலீஸார் கைதுசெய்ய வேண்டும். மற்றும் கட்சி அவரை உடனடியாக நீக்க வேண்டும். குரல் அச்சுறுத்தலைக் கேட்டு இதயம் உடைந்தது. டெய்சிக்கு வலிமை, என் ஆறுதல் மற்றும் ஆதரவு" எனப் பதிவிட்டிருக்கிறார்.

காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட்; சூர்யா சிவாவுக்குத் தடை- சர்ச்சை ஆடியோ; அண்ணாமலை நடவடிக்கை- நடந்தது என்ன?

இந்த நிலையில், ``காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருவதால், கட்சியில் அவர் வகித்துவரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்துக்கு நீக்கப்படுகிறார்” என அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்,

காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட்; சூர்யா சிவாவுக்குத் தடை- சர்ச்சை ஆடியோ; அண்ணாமலை நடவடிக்கை- நடந்தது என்ன?

மேலும் அண்ணாமலை, ``தமிழக பாஜக சிறுபான்மையினர் அணித் தலைவர் டெய்சி சரண் அவர்களுக்கும், ஓ.பி.சி அணியின் மாநிலப் பொதுச்செயலாளர் சூர்யா சிவா அவர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று இன்று காலை என் கவனத்துக்கு வந்தது.

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை

இந்தச் சம்பவத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அடுத்த ஏழு நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில துணைத் தலைவரும், ஒழுங்கு நடவடிக்கைக்குழுவின் தலைவருமான கனக சபாபதி அவர்களிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறாது.

ஒழுங்கு நடவடிக்கைக்குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் வரை சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என அறிவுறுத்துகிறோம்” எனக் கூறியிருக்கிறார்.