Published:Updated:

``சஸ்பெண்ட் போதாது... சிறைக்கு அனுப்ப வேண்டும்"- பாஜக-வுக்கு மாயாவதி கோரிக்கை

மாயாவதி ( Twitter )

``நாட்டில் அனைத்து மதத்தினருக்குமான மரியாதை என்பது மிக அவசியமான ஒன்று. எந்தவொரு மதத்தையும் புண்படுத்தும் வகையில் வார்த்தைகளை உபயோகிப்பதென்பது எந்தவகையிலும் ஏற்கத்தக்கதல்ல.” - மாயாவதி

``சஸ்பெண்ட் போதாது... சிறைக்கு அனுப்ப வேண்டும்"- பாஜக-வுக்கு மாயாவதி கோரிக்கை

``நாட்டில் அனைத்து மதத்தினருக்குமான மரியாதை என்பது மிக அவசியமான ஒன்று. எந்தவொரு மதத்தையும் புண்படுத்தும் வகையில் வார்த்தைகளை உபயோகிப்பதென்பது எந்தவகையிலும் ஏற்கத்தக்கதல்ல.” - மாயாவதி

Published:Updated:
மாயாவதி ( Twitter )

பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளரான நுபுர் ஷர்மா, ஊடக விவாத நிகழ்ச்சியொன்றில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்துவந்த நிலையில், டெல்லி மாநில பா.ஜ.க நிர்வாகி நவீன்குமார் ஜிண்டால், அத்தகைய கருத்துக்கு ஆதரவாக ட்வீட் செய்தது மேலும் நிலைமையை மோசமாக்கியது. அதைத் தொடர்ந்து பா.ஜ.க., நுபுர் ஷர்மாவைக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தும், நவீன்குமார் ஜிண்டாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியும் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, பா.ஜ.க-வுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பாஜக
பாஜக

இது குறித்து மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில், ``நாட்டில் அனைத்து மதத்தினருக்குமான மரியாதை என்பது மிக அவசியமான ஒன்று. எந்தவொரு மதத்தையும் புண்படுத்தும் வகையில் வார்த்தைகளை உபயோகிப்பதென்பது எந்தவகையிலும் ஏற்கத்தக்கதல்ல. இது போன்ற விவகாரங்களில், பா.ஜ.க-வும் தனது கட்சியினர் மீதான கயிற்றை இறுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், அவர்களை சஸ்பெண்ட் செய்து கட்சியிலிருந்து வெளியேற்றினால் மட்டும் போதாது. கடுமையான சட்டங்களின் கீழ் அவர்களை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இந்தச் சர்ச்சை காரணமாக, உத்தரப்பிரதேச மாநில கான்பூரில் வெடித்த கலவரம் குறித்தும் மாயாவதி, ``கான்பூர் வன்முறைச் சம்பவத்தின் அடிப்படையைத் தெரிவிக்க வேண்டும். அதேசமயம், வன்முறைக்கெதிரான போலீஸ் நடவடிக்கையில் பொதுமக்கள் யாரையும் துன்புறுத்தவும் கூடாது. பகுஜன் சமாஜ் கட்சியின் கோரிக்கையும் இதுவே" என ட்வீட் செய்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism