Published:Updated:

நீட் தேர்வு:`மீள முடியாத வேதனையுடன் கேட்கிறோம்... கைவிடுங்கள்!’ - நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன்

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

``நீதியும் தேர்வும் மனு நீதியின் சாயலாகவும், சாரமாகவும் மாறிவிடக் கூடாது என்பதால் கேட்கிறோம். `நீட்’டைக் கைவிடுங்கள்... கைவிடுங்கள்... கைவிடுங்கள்...'' - நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன்

நீட் தேர்வு அச்சத்தால் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகிவருகிறது. கடந்த 12-ம் தேதி ஒரே நாளில் மூன்று பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நீட் தேர்வுக்கு யார் காரணம் என்று ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் வார்த்தைப்போர் நடத்திவருகின்றன.

நீட் தேர்வு அச்சத்தில்  மரணம்
நீட் தேர்வு அச்சத்தில் மரணம்

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் நேற்று நீட் தேர்வு ஏற்படுத்திவரும் விபரீதத்தைப் பற்றி வேதனையுடன் பேசி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.

நீட் தேர்வு: தர்மபுரி, நாமக்கல்லை சேர்ந்த 2 மாணவர்கள் தற்கொலை! - தமிழகத்தை உலுக்கும் மரணங்கள்

``அனிதா முதல் ஜோதி ஸ்ரீதுர்கா வரை பன்னிரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் மரணத்தின் துயரத்திலிருந்து மீள முடியாமல் வேதனையுடன் கேட்கிறோம்... நீட் எனும் தேசிய தகுதித் தேர்வை எப்போது கைவிடுவீர்கள்?

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

நீட் எனும் திரிசூலத்தில் மூன்று முனை இருக்கின்றன. ஒரு முனை, மாநில அரசின் கல்வி முறையையும், மாநில உரிமையையும் குத்திக் கிழிக்கிறது. மற்றொரு முனை டீச்சிங்கைக் கொன்று, கோச்சிங்கைக் கொண்டாடுகிறது. மூன்றாவது முனை, மாணவர்களின் உளவியலைச் சிதைத்து தற்கொலைக்குத் தள்ளுகிறது. இந்தக் கொடிய கொலைக்கருவியை இன்னும் எத்தனை குழந்தைகளின் மரணத்துக்குப் பிறகு கீழே போடுவீர்கள்?

மருத்துவ மாணவர் சேர்க்கை சம்பந்தமாக தமிழக சட்டப்பேரவை ஏக மனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பினார். அரசமைப்புச் சட்டம் 201-ன் படி மசோதாவைத் திருப்பி அனுப்பினால், அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். ஆனால், இன்றுவரை காரணம் தெரிவிக்கப்படவில்லை.

நீட் தேர்வு எழுத வந்தவர்கள்
நீட் தேர்வு எழுத வந்தவர்கள்

இது பற்றி நீதித்துறை ஆளுமைகள் கேள்வி எழுப்புவதில்லை. ஆனால், திரைக்கலைஞர் சூர்யா கருத்து கூறினால் உடனே எதிர்வினை புரிகிறார்கள். நீதியும் தேர்வும் மனுநீதியின் சாயலாகவும், சாரமாகவும் மாறிவிடக் கூடாது என்பதால் கேட்கிறோம். நீட்டைக் கைவிடுங்கள்... கைவிடுங்கள்... கைவிடுங்கள்....’’ என்று பேசினார். அவரின் பேச்சு மற்ற மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களை உன்னிப்பாக கவனிக்க வைத்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு