Published:Updated:

``கோரக்பூர் ரயில்வேயில் தேர்வானவர்களுக்கு தெற்கு ரயில்வேயில் பதவியா?"- சு.வெங்கடேசன் எம்.பி

தெற்கு ரயில்வேயில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களைவிட குறைவானதாகும். அதுமட்டுமல்ல இதர ரயில்வேயில் தேர்வு செய்யப்பட்டவர்களை தெற்கு ரயில்வேயில் நியமிப்பது சட்ட விரோதமாகும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ரயில்வே பணிக்கு உ.பி.யில் தேர்வு செய்யப்பட்டவர்களை சென்னையில் நியமித்து, சென்னையில் தேர்வு செய்யப்பட்டவர்களைக் காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ள ரயில்வேயின் உத்தரவை திரும்பப்பெறவிலையென்றால் நேரடி போராட்டத்தில் இறங்குவோம் என்று மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் எச்சரித்துள்ளார்.

சு.வெங்கடேசன் எம்.பி
சு.வெங்கடேசன் எம்.பி

அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "உத்தரப்பிரதேசம் கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 நபர்களை தெற்கு ரயில்வே பணிகளுக்கு நியமித்து, தெற்கு ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குறியது. உடனடியாக இந்த உத்தரவைத் திரும்பப் பெறவேண்டும்.

2018-ல் ரயில்வே வாரியம், உதவி ரயில் ஓட்டுநர் காலியிடங்களுக்கும் டெக்னீசியன் காலியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் கோரியிருந்தது. தெற்கு ரயில்வேயில் 761 உதவி ரயில் ஓட்டுநர் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரி இருந்தது. விண்ணப்பதாரர்கள் ஒரு ரயில்வேக்குத்தான் விண்ணப்பிக்க முடியும். எந்த மொழியில் வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம். எந்த ரயில்வேக்கு தேர்வு எழுதுகிறார்களோ அந்த ரயில்வேக்குதான் அவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

ரயில்வே அமைச்சகத்துக்கு கடிதம்
ரயில்வே அமைச்சகத்துக்கு கடிதம்

வேறு ரயில்வேக்கு அவர்கள் நியமிக்கப்பட கூடாது. ஆனால் உத்தரப் பிரதேசத்திலுள்ள கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேரை தெற்கு ரயில்வேயில் உள்ள 51 இடங்களில் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர்களின் மதிப்பெண்கள் தெற்கு ரயில்வேயில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களைவிட குறைவானதாகும். அதுமட்டுமல்ல இதர ரயில்வேயில் தேர்வு செய்யப்பட்டவர்களை தெற்கு ரயில்வேயில் நியமிப்பது சட்ட விரோதமாகும்.

`549 பணியிடம்; 7000 விண்ணப்பம்'- துப்புரவுப் பணிக்குப் போட்டி போடும் பொறியியல் பட்டதாரிகள்!
இந்திய ரயில்வே
இந்திய ரயில்வே

ஏற்கனவே டெக்னீசியன் கேட்டகரியில் தெற்கு ரயில்வேக்கு விண்ணப்பித்தவர்களில் 60 சதம் பேர் இந்தியில் தேர்வு எழுதியவர்கள் வந்துள்ளார்கள். இந்த உதவி ஓட்டுநர் பதவிக்கு 13 சதவிகிதம் பேர் இந்தியில் தேர்வு எழுதியவர்கள் வந்துள்ளார்கள். இது ரயில்வே அமைச்சர் எனக்கு கொடுத்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தெற்கு ரயில்வேயில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை புறக்கணித்து கோரக்பூர் ரயில்வேயில் தேர்வு செய்யப்பட்டவர்களை நியமிப்பது தெற்கு ரயில்வே விண்ணப்பதாரர்களின் வேலைவாய்ப்பை பாதிப்பதோடு ஜனநாயக அமைப்பை சீர்குலைப்பதாகவும் உள்ளது.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்
என்.ஜி.மணிகண்டன்

ரயில்வே அமைச்சர் உடனே தலையிட்டு கோரக்பூர் விண்ணப்பதாரர்களை கோரக்பூர் திருப்பி அனுப்பவும், தெற்கு ரயில்வேயின் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை உதவி ஓட்டுனர் காலியிடங்களில் நிரப்பவும் கோருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு