Published:Updated:

பாஜக-வில்தான் இருக்கிறேன், ஆனால் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறேன் - எஸ்.வி.சேகர்

அந்த நட்சத்திரப் பேச்சாளர்கள் 30 பேர் லிஸ்ட்ல என் பேர் போடவில்லை. போடலைனு சொன்ன பிறகு என்னை சேர்த்துக்கோங்கனு சொல்லலை - எஸ்.வி.சேகர் ஓப்பன் டாக்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

எப்போதுமே டிரெண்டில் இருக்கும் எஸ்.வி.சேகர், தேர்தல் சமயத்தில் சைலன்ட் மோட்டுக்குப் போய்விட்டாரே... என்று நினைத்தால் `நான் இங்கே ஆக்டிவ்வாகதான் இருக்கேன் பாஸ்.' என ஆஜராகிறார்.


``பா.ஜ.க-வில்தான் இருக்கீங்களா?"

``ஆமாம்... நான் பா.ஜ.க-வில்தான் இருக்கிறேன். ஆனால், அது பா.ஜ.க-வுக்குத் தெரியுமா, தெரியாதானு தெரியலை. நான் கட்சியிலிருந்து விலகியில்லை. விலக்கிவைக்கப்பட்டிருக்கிறேன். மோடி அட்வைஸ்படிதான் பா.ஜ.க-வில் சேர்ந்தேன். 1990-லிருந்தே பா.ஜ.க அனுதாபியாக இருந்திருக்கிறேன். `நீங்க பார்ட்டி அரசியலுக்கு வர்ற மாதிரி இருந்தால் அ.தி.மு.க-வுக்கு வாங்க. ஆனால், நாங்களே கூப்பிட மாட்டோம்'னு ஜெயலலிதா சொன்னாங்க. இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி தமிழகத்தில் வாஷ்அவுட் ஆனது.

எஸ்.வி.சேகர்
எஸ்.வி.சேகர்

நான் வெற்றிக்குப் பின்னாடி ஓடுபவன் அல்ல. வெற்றி என்னால் வர வேண்டும் என நினைப்பவன். அதனால், நானே ஜெயலலிதாவிடம் கடிதம் கொடுத்து அ.தி.மு.க-வில் இணைந்தேன். அதன் பிறகு அந்தக் கட்சியிலிருந்து என்னை நீக்கினார்கள். கவலைப்படவில்லை. இப்போது பா.ஜ.க-வில் இருக்கிறேன். என்னைப் பயன்படுத்திக்கொண்டால் பா.ஜ.க-வுக்கு நல்லது. இல்லையெனில் எனக்கு எந்த நஷ்டமுமில்லை."

``எல்.முருகனின் செயல்பாடு எப்படி இருக்கிறது?''

``முருகனின் `வேல் வேல்... வெற்றி வேல்' அந்த யாத்திரை வெற்றி பெற்றிருக்கிறது. அதற்கு முருகனுக்குத்தான் வாழ்த்துகள் சொல்லணும். இந்தத் தேர்தலில் தமிழக பா.ஜ.க 14 சதவிகித வாக்குகளை வாங்கும் என நான் கணிக்கிறேன். இந்துக்கள் வாக்குவாங்கி இங்கு பெரிது. `என்னப்பா... எப்போ பார்த்தாலும் நம்மையே திட்டிக்கொண்டிருக்கிறார்கள்?' என இந்துக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்த வாக்குகளெல்லாம் பா.ஜ.க-வுக்கு ஆதரவாகத்தான் வரும். மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமைக்கும்."

ஆதாரிலிருந்து மொபைல் எண் எடுத்ததா பாஜக? - தேர்தலை ஏன் தள்ளி வைக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் கேள்வி

``என்னைப் பிரசாரத்துக்குப் பயன்படுத்திக்கொண்டால் கட்சிக்கு நல்லதுனு சொல்கிறீர்கள். ஆனாலும் உங்களை பாஜக தரப்பு அழைப்பதில்லையே..."

``ஆமாம். அந்த நட்சத்திரப் பேச்சாளர்கள் 30 பேர் லிஸ்ட்ல என் பேர் போடவில்லை. போடலைனு சொன்ன பிறகு என்னை சேர்த்துக்கோங்கனு சொல்லலை. ஆனாலும் என்னைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணிதான் வென்று வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அ.தி.மு.க ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறேன்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``மோடி உங்கள் நண்பர் என்று சொல்கிறீர்கள். மோடியிடம் நீங்கள் புறக்கணிக்கப்படுவதைச் சொன்னீர்களா?"

``ஒவ்வொரு விஷயத்தையும் புகாராகச் சொல்லாமல்... சிறப்பான விஷயங்களைச் சொல்லும்போது சிறப்பாகச் சொல்வது. ஆலோசனை சொல்லும்போது ஆலோசனை சொல்வது. மோடியுடன் தொடர்பில்தான் இருக்கிறேன். என்னுடைய தகவல்கள் அவருக்குப் போய்க்கொண்டிருக்கின்றன."

``ரஜினி கட்சி ஆரம்பிக்காதது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

``அவர் கட்சி ஆரம்பிக்காததை ஒருவித கோழைத்தனமாகத்தான் பார்க்கிறேன். அவர் கட்சி ஆரம்பிச்சிருக்கணும் அல்லது அவர் கட்சி ஆரம்பிப்பேன்னு சொல்லாமல் இருந்திருக்கணும். அவர் அரசியலுக்கு வருவேன்னு தட்டிய தட்டில் தூசி பறந்ததுதான் மிச்சம். மற்றபடி ஒன்றுமில்லை. ரஜினி ரொம்ப குழம்பிப்போய்விட்டார்."


``கமலின் `மக்கள் நீதி மய்யம்' கட்சிக்கு எதிர்காலம் எப்படியிருக்கும்?"

``சிறப்பான எதிர்காலம் உண்டு. ஆனால், தமிழகம் மின்மிகை மாநிலமாக டார்ச் லைட்டுக்கு இந்தத் தேர்தலில் தேவை இருக்காது."

``2,000 ரூபாய் நோட்டில் சிப் இருக்கிறதா?"

``கிரிஜா வைத்தியநாதன் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்?"

``மயில்சாமி சுயேச்சையாகப் போட்டிப்போடுகிறார்... ஒரு நடிகராக என்ன நினைக்கிறீர்கள்?"

``காவல்துறைக்கு பயந்துகொண்டு ஆஜராகாமல் இருந்தீர்களே..."

போன்ற பல கேள்விகளுக்கான பதில்களைக் கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு