Published:Updated:

`இந்திய வரலாற்றுக்கே வெளிச்சம் பாய்ச்சும்!’ - கீழடி அகழாய்வு முடிவுகளால் நெகிழும் சு. வெங்கடேசன்

Su. Vengadesan

ஒரு ஏக்கர் நிலத்தில் தந்தத்திலான 89 தாயக்கட்டைகள் கிடைத்துள்ளன. பண்பாட்டு, தொழில் நாகரிக அடையாளங்களை உணர்த்தும் வகையில் இந்த முடிவுகள் அமைகின்றன.

`இந்திய வரலாற்றுக்கே வெளிச்சம் பாய்ச்சும்!’ - கீழடி அகழாய்வு முடிவுகளால் நெகிழும் சு. வெங்கடேசன்

ஒரு ஏக்கர் நிலத்தில் தந்தத்திலான 89 தாயக்கட்டைகள் கிடைத்துள்ளன. பண்பாட்டு, தொழில் நாகரிக அடையாளங்களை உணர்த்தும் வகையில் இந்த முடிவுகள் அமைகின்றன.

Published:Updated:
Su. Vengadesan

கீழடியில் தமிழக அரசு சார்பில் 4 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டன. தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், துறையின் செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், ஆய்வு முடிவுகள் கையேடாக வெளியிடப்பட்டது. இதில், சங்க காலம் என்பது முந்தைய கணிப்புகளைவிட மேலும் 400 ஆண்டுகள் பழைமையானதாக இருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது.

Keezhadi excavations
Keezhadi excavations
TN archaeology department

சங்ககாலத் தமிழ்ச் சமூகம் எழுத்தறிவு பெற்ற சமூகம் என்பதற்குச் சான்றாகப் பெயர்கள் பொறிக்கப்பட்ட பானைகள். இருவேறு நிறங்களில் பானைகள், நூல் நூற்கும் தக்கழிகள், கூர்முனை கொண்ட எலும்பால் செய்யப்பட்ட கருவிகள், தங்க அணிகலன்கள், மணிகள், தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, சதுரங்கம் மற்றும் பகடைக் காய்கள் போன்றவையும் கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடி அகழாய்வு முடிவுகள் வரலாற்றைத் திருத்தி எழுதும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார், எம்.பி சு.வெங்கடேசன். அப்போது கீழடியின் 4-ம் கட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியிருப்பது குறித்து பேசுகையில், "10 நாள்களாக நாங்கள் விடுத்த தொடர் கோரிக்கையை அடுத்து, கீழடியின் 4-ம் கட்ட அகழ்வாய்வு முடிவுகளைத் தமிழகத் தொல்லியல்துறை இப்போது வெளியிட்டுள்ளதில் மகிழ்ச்சி.

அமர்நாத் மேற்கொண்ட ஆய்வின்போது 6 மீட்டர் ஆழக்குழி அமைத்து அதில் 3-வது மீட்டர் ஆழத்தில் கிடைத்த சாம்பிள்கள் கி.மு 290 காலத்தினதாக அமைந்தன. தற்போது, எதிர்பார்த்ததைவிட மேலாக கி.மு 6-ம் நூற்றாண்டுப் பதிவுகளின் சான்றுகளாக இந்த முடிவுகள் கிடைத்திருக்கின்றன. இந்த முடிவுகள், இந்திய வரலாற்றுக்கே வெளிச்சம் பாய்ச்சுவதாக அமைந்துள்ளன. அகழ்வில் இன்னும் ஆழம் சென்றால், இதற்கும் பிந்தைய காலத்தின் சான்றுகள் கிடைக்கும்.

Keezhadi excavations
Keezhadi excavations

ஒரு ஏக்கர் நிலத்தில் தந்தத்திலான 89 தாயக்கட்டைகள் கிடைத்துள்ளன. பண்பாட்டு, தொழில் நாகரிக அடையாளங்களை உணர்த்தும் வகையில் இந்த முடிவுகள் அமைகின்றன. கி.மு 600-களிலேயே பேச்சும் எழுத்தும் இருந்திருப்பது, இந்திய மொழிகளிலேயே அதிக வயதுடைய மொழி, தமிழ்தான் என்பதை உறுதிசெய்கிறது. 4-ம் கட்ட ஆய்வில் 1,001 குறியீடுகள் கிடைத்திருப்பது, சாதாரண செய்தியல்ல. சிந்துவெளி ஆய்விலும் கீழடி ஆய்விலும் நிறைய ஒற்றுமைகள் தெரிய வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கீழடி ஆய்வுதொடங்கிய அதே ஆண்டில் தொடங்கப்பட்டது, பாட் நகர் அகழாய்வு. அங்கே 'உணரும் அருங்காட்சியகம்' அமைக்க மத்திய அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் சனோலி பகுதியில் பழங்காலத்தேர் கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பகுதி, பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணிகளுக்காக 6,000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், அதில் கீழடி இடம்பெறவில்லை.

பாட் நகர், சனோலி ஆய்வுகள், எற்பாடுகள் எல்லாமே பாராட்டுக்குரியவைதான். அதேசமயம், கீழடியையும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். ஆய்வுக்கும் அருங்காட்சியகம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கி அடுத்தகட்ட அகழாய்வை மத்திய அரசு நடத்த வேண்டும்.

Vengadesan MP
Vengadesan MP

முதல் இரண்டாண்டுகள் அமர்நாத் மேற்கொண்ட ஆய்வறிக்கை, இடைக்கால அறிக்கையாகக் கொள்ளப்பட்டது. மூன்றாம் ஆண்டில் நியமிக்கப்பட்ட ஸ்ரீதர், அகழாய்வு செய்த இடத்திலிருந்து கட்டுமானத் தொடர்ச்சி எதுவும் கிடைக்கவில்லை என்று தனது ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார். இதை முன்வைத்து, ஆய்வை முடித்து கீழடியைக் கைவிட்டது மத்திய அரசு. இது, அரசின் காழ்ப்புணர்வையே காட்டுகிறது. தொடர்ந்து தமிழகத் தொல்லியல்துறையும் மத்திய தொல்லியல்துறையும் இந்த ஆய்வுப் பணியைத் தொடர வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism