Published:Updated:

``ஆளுநர் ரவி, சட்டத்தை மதிக்காமல் காட்டாட்சி நடத்துகிறாரா? - நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு காட்டம்

டி.ஆர்.பாலு

`நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ரவியை மாற்ற வேண்டும்' என திமுக எம்.பி-க்கள் மக்களவையில் கோரிக்கை வைத்துள்ளனர்.

``ஆளுநர் ரவி, சட்டத்தை மதிக்காமல் காட்டாட்சி நடத்துகிறாரா? - நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு காட்டம்

`நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ரவியை மாற்ற வேண்டும்' என திமுக எம்.பி-க்கள் மக்களவையில் கோரிக்கை வைத்துள்ளனர்.

Published:Updated:
டி.ஆர்.பாலு

தமிழக அரசு அனுப்பிய நீட் உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருக்கிறார் எனக் குற்றச்சாட்டு இருந்துவருகிறது. இந்த நிலையில் மக்களவையில் டி.ஆர்.பாலு இது குறித்துப் பேசுகையில், ``தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 7-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அதில் ஒரு மசோதாவுக்குக்கூட ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத நிலையில் அரசை எப்படி நடத்துவது? ஆளுநர் ரவி சட்டத்தை மதிக்காமல் செயல்படுகிறார். சட்டத்தை மதிக்காமல் காட்டாட்சி நடத்துகிறாரா? ஆளுநருக்கு நமது அரசியல் சாசனம் அதிக அதிகாரங்களை வழங்கியுள்ளது. நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ரவியை மாற்ற வேண்டும். மாநில அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் முக்கியப் பணி'' என்றார்.

ஸ்டாலின், ரவி
ஸ்டாலின், ரவி

இதற்கிடையே, சென்னை, கிண்டியிலுள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அரை மணி நேரத்துக்கு மேல் நீடித்த இந்தச் சந்திப்பில், நீட் விலக்கு கோரும் மசோதாவை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். மசோதாக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பது மக்களின் உணர்வுகளை மதிப்பதாக அமைந்திடும் என ஆளுநரை முதலமைச்சர் வலியுறுத்திய நிலையில், நீட் விலக்கு உட்பட நிலுவையில் உள்ள மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைப்பதாக ஆளுநர் உறுதியளித்திருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism