Published:Updated:

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு?! - மத்திய அரசு தகவல்

அண்ணாமலை

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு?! - மத்திய அரசு தகவல்

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
அண்ணாமலை

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்குத் தொடர்ந்து மாவோயிஸ்ட்டுகளிடமிருந்தும், மதத் தீவிரவாதிகளிடமிருந்தும் மிரட்டல்வருவதாக உளவுத்துறை, மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சகம் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த இரண்டு நாள்களாக மத்திய உள்துறையைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள், அண்ணாமலையின் வீடு உள்ளிட்ட இடங்களில் வந்து சோதனை செய்துவிட்டுச் சென்றுள்ளனர். இதற்கான ஒப்புதலிலும் அண்ணாமலை கையெழுத்திட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுவந்த Y பிரிவு பாதுகாப்பு, Z பிரிவு பாதுகாப்பாக உயர்த்தப்படவிருப்பதால் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்புப் படை
பாதுகாப்புப் படை

தற்போது அண்ணாமலைக்கு வழங்கப்படவிருக்கும் Z பிரிவு பாதுகாப்பில், 33 சி.ஆர்.பி.எஃப் கமாண்டோக்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பளிக்கவிருக்கின்றனர். பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் வீடு, அவர் தங்கும், செல்லும் இடங்களில் 24 மணி நேரமும் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பில் இருப்பார்கள் எனவும் தெரியவந்திருக்கிறது.