Published:Updated:

``தமிழ்நாட்டில் இருக்கும் 90% அமைச்சர்களுக்கு ஆங்கிலம்கூடத் தெரியாது'' - அண்ணாமலை

அண்ணாமலை

சென்னையில், `திராவிட மாயை' எனும் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் இருக்கக்கூடிய 90% அமைச்சர்களுக்கு ஆங்கிலம்கூடத் தெரியாது" என தி.மு.க அமைச்சர்களை விமர்சித்துள்ளார்.

``தமிழ்நாட்டில் இருக்கும் 90% அமைச்சர்களுக்கு ஆங்கிலம்கூடத் தெரியாது'' - அண்ணாமலை

சென்னையில், `திராவிட மாயை' எனும் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் இருக்கக்கூடிய 90% அமைச்சர்களுக்கு ஆங்கிலம்கூடத் தெரியாது" என தி.மு.க அமைச்சர்களை விமர்சித்துள்ளார்.

Published:Updated:
அண்ணாமலை

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அண்மையில், தமிழ்த்தாய் குறித்து `எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே' எனக் குறிப்பிட்டு தமிழ்த்தாய்ப் படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, `தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில் தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’வையும் இணைத்துப் படம் போடும்போதே உங்களின் கூப்பிய கைகளுள் மறைத்துவைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டிவிட்டது’ என்று ட்விட்டரில் விமர்சித்திருந்தார். அதைத் தொடர்ந்து அமைச்சரின் இத்தகைய பதிவுக்கு அண்ணாமலை, `முதல்வர் ஸ்டாலின் பெயரில் `ஸ' என்ற எழுத்தை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்க தமிழ்நாடு அரசு உடனே குழு அமைக்க வேண்டும்' எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது, ``தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 90% அமைச்சர்களுக்கு ஆங்கிலம்கூடத் தெரியாது" என்று தி.மு.க அமைச்சர்களை அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை

சென்னையில், `திராவிட மாயை' எனும் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை, ``திராவிடம் என்பது குழப்பம் நிறைந்த ஒன்று. திமுக-வும் பெரிய வெங்காயமும் ஒன்று.. உரிக்க உரிக்க அதில் ஒன்றும் இருக்காது.
திமுக அமைச்சர்கள் சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள், கோடைக்காலத்தில் மழை வந்தாலும் அதற்குக் காரணம் திராவிட மாடல் என்று கூறுவார்கள்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 90% அமைச்சர்கள் இங்கே நாம ஃப்ளைட் ஏத்திவிட்டா ஏறுவாங்களே தவிர சொந்தமா ஏறக்கூட முடியாத நிலைமையில்தான் இருக்காங்க. ஏன்னா ஆங்கிலத்தில் படிச்சு, பேசி ஏறணும். டெல்லியில போய் இறங்குனதுக்கு அப்புறம் கார் வந்ததும் ஏறிச் செல்கிறார்கள். அதனால, அவங்களோட அலுவலகத்துல இருக்கக்கூடிய அதிகாரிகளை எடுத்துவிட்டு நீங்களாக தனியாக டெல்லி சென்று தமிழகத்துக்கு ஒரு ரூபாய் வாங்கிட்டு வாங்கன்னா, 90% அமைச்சர்களால் முடியாது" எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism