Published:Updated:

``அடுத்த 6 மணி நேரம் பாஜக அலுவலகத்தில்தான் இருப்பேன்; முடிந்தால் கைதுசெய்யுங்கள்!” - அண்ணாமலை

அண்ணாமலை

``திமுக-வைப் போன்று கோழைத்தனமாக கண்டன நோட்டீஸ் கொடுப்பது எல்லாம் நமக்கு வராது” எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

``அடுத்த 6 மணி நேரம் பாஜக அலுவலகத்தில்தான் இருப்பேன்; முடிந்தால் கைதுசெய்யுங்கள்!” - அண்ணாமலை

``திமுக-வைப் போன்று கோழைத்தனமாக கண்டன நோட்டீஸ் கொடுப்பது எல்லாம் நமக்கு வராது” எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Published:Updated:
அண்ணாமலை

தமிழக அமைச்சர்கள், முதல்வர் எனப் பலர்மீது அண்ணாமலை தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துவருகிறார். இந்த நிலையில், அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``அதிமுக அமைச்சர்களிடம் மிரட்டிப் பணம் பெற்றதாக திமுக நிர்வாகிகள் குற்றம்சாட்டிவருகின்றனர். திமுக-வுக்குத் தெம்பு, திராணி இருந்தால் தக்க ஆதாரத்தைக் கொடுத்து என்னைக் கைதுசெய்யுங்கள். நான் அடுத்த ஆறு மணி நேரம் பாஜக அலுவலகத்தில்தான் இருப்பேன். நீங்கள் என்னைக் கைது செய்யாவிட்டால், தமிழக மக்கள் இனி நீங்கள் சொல்வதை இன்றிலிருந்து ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

அண்ணாமலை
அண்ணாமலை

திமுக-வைப் போன்று கோழைத்தனமாகக் கண்டன நோட்டீஸ் கொடுப்பதெல்லாம் நமக்கு வராது. திமுக எம்.பி வில்சன் என்னிடம் 10 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பி.ஜி.ஆர் நிறுவனம் ரூ.500 கோடி, ஆர்.எஸ்.பாரதி ரூ.100 கோடி, வில்சன் ரூ.10 கோடி என மொத்தம் ரூ.610 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். எனக்கு ஊரில் ஆடு, மாடுகள் மற்றும் இரண்டு டப்பாதான் இருக்கின்றன. என்னிடம் ரூ.610 கோடி இல்லை. நான் ரூ.610 கோடிக்கு வொர்த் இல்லை. தொட்டம்பட்டியிலிருந்து வந்த என்னை முடிந்தால் தொட்டுப் பார்க்கட்டும்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism