Published:Updated:

``திமுக அமைச்சர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு செல்லமாக அடிப்பது, தட்டுவது” - அண்ணாமலை

அண்ணாமலை

``அதிமுக உட்கட்சிப் பிரச்னைக்கு தீர்வு காண்பது அந்தத் தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் இடையே இருக்கிற பிரச்னை'' என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

``திமுக அமைச்சர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு செல்லமாக அடிப்பது, தட்டுவது” - அண்ணாமலை

``அதிமுக உட்கட்சிப் பிரச்னைக்கு தீர்வு காண்பது அந்தத் தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் இடையே இருக்கிற பிரச்னை'' என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
அண்ணாமலை

சென்னையில் காமராஜரின் திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தேர்வில் கேட்கப்பட்ட சாதி தொடர்பான சர்ச்சை கேள்வி குறித்துப் பேசினார். ``திமுக-வைத் தோற்றுவித்த பெரியாரின் பெயர், ஒரு பல்கலைக்கழகத்துக்கு வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அங்கு இது மாதிரியான செயல்கள் நடக்கின்றன என்றால் அவர்கள் எந்தச் சமூகநீதியைப் பேசுகிறார்கள் என்று கேள்வி எழுகிறது. மேலும் அங்குள்ள பேராசிரியர்கள் எந்தவித மனநிலையில் இருக்கின்றனர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இருக்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது போன்ற நிகழ்வுகள் வருத்தம் அளிக்கின்றன” என்றவர், ``அதிமுக உட்கட்சிப் பிரச்னைக்கு தீர்வு காண்பது அந்தத் தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் இடையே இருக்கிற பிரச்னை. இது தொடர்பாக பாஜக கருத்து சொல்லவேண்டிய கட்டாயம் இல்லை.

அண்ணாமலை
அண்ணாமலை

திமுக அமைச்சர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு செல்லமாக அடிப்பது, தட்டுவது. தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படிச் செல்லமாகத் தட்டுவதைப் பார்க்கிறோம். ஒரு பேப்பரை எடுத்து தலையில் வைத்து டம்முன்னு ஒரு கொட்டு கொட்டுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சி இது குறித்து கேட்டதற்குச் செல்லமாக அடித்தோம் என சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் திமுக அமைச்சர்களுக்கு அதிகாரத் திமிர் வந்திருக்கிறது.

மேலும் அதற்கு எடுத்துக்காட்டாக தா.மோ.அன்பரசன் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர், கடலூரில் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.பி ஆகியோரின் செயல்கள் உள்ளன. அதிகார மமதையில் திமுக இருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக இந்தச் சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!