Published:Updated:

புதிய கல்விக் கொள்கை தொடர்பான மாநிலக் கல்வி அமைச்சர்கள் மாநாடு - புறக்கணித்தது தமிழ்நாடு அரசு!

மு.க.ஸ்டாலின்

குஜராத்தில் நடைபெறும் அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு புறக்கணிக்கிறது.

புதிய கல்விக் கொள்கை தொடர்பான மாநிலக் கல்வி அமைச்சர்கள் மாநாடு - புறக்கணித்தது தமிழ்நாடு அரசு!

குஜராத்தில் நடைபெறும் அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு புறக்கணிக்கிறது.

Published:Updated:
மு.க.ஸ்டாலின்

அமைச்சர் பொன்முடி அண்மையில், ``தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் புதிய கல்விக் கொள்கை என்பது நடைமுறைக்கு வரவேண்டிய அவசியமே இல்லை. அதை ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை என்பதை முதலமைச்சர் தெளிவாக வலியுறுத்தியிருக்கிறார்'' என்று திட்டவட்டமாகக் கூறினார்.

இந்த நிலையில், இன்று மற்றும் நாளை குஜராத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மாநாடு நடைபெறவிருக்கிறது. இதைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையிலான மாநாட்டுக்கு அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

இந்த மாநாட்டில், கல்வி அமைச்சர்களுக்குக் கலந்துகொள்ள அழைப்பு வந்தபோதும், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஸ் ஆகியோர் புறக்கணித்துள்ளனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணையமைச்சர் சுபாஷ் சர்கார், அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர்கள், உயரதிகாரிகள் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மேலும் கல்வியை மாநிலப் பட்டியலுக்குள் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்திவரும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism