Published:Updated:

``மாநில உரிமைகளுக்கான சந்திப்பு!” - டெல்லி பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின்

ஸ்டாலின் - மோடி

``அமீரகப் பயணம் வெற்றியடைந்த நிலையில், அடுத்த பயணம் டெல்லியை நோக்கி அமைகிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

``மாநில உரிமைகளுக்கான சந்திப்பு!” - டெல்லி பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின்

``அமீரகப் பயணம் வெற்றியடைந்த நிலையில், அடுத்த பயணம் டெல்லியை நோக்கி அமைகிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
ஸ்டாலின் - மோடி

தமிழக முதலமைச்சர் டெல்லி பயணம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ``அமீரகப் பயணம் வெற்றியடைந்த நிலையில், அடுத்த பயணம் டெல்லியை நோக்கி அமைகிறது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைத் தொடர்ந்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களையும் சந்திக்கவிருக்கிறேன்.

துபாயில் ஸ்டாலின்
துபாயில் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் கழக அரசு அறிவித்துள்ள திட்டங்களுக்குரிய நிதி ஒதுக்கீடு, தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு தரவேண்டிய வரி வருவாய், மழை - வெள்ள நிவாரணத் தொகை உள்ளிட்ட நம்முடைய மாநில உரிமைகளுக்கான சந்திப்பு இது. அதைத் தொடர்ந்து இந்திய அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு இருக்கிறது. டெல்லியில் திராவிடக் கோட்டை தலைநிமிரும். டெல்லியில் திராவிடக் கோட்டையாக உருவாகியுள்ள கழக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயம் ஏப்ரல் 2-ம் நாள் திறக்கப்படுகிறது. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் நேரில் வழங்கப்பட்டுள்ளது

இந்திய ஒன்றிய அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் கொள்கைகளை செயல்வடிவமாக்கும் திராவிட மாடலும் தவிர்க்க முடியாத இடத்தை வகிக்கின்றன. அதன் அழுத்தமான அடையாளம்தான் டெல்லியில் திறக்கப்படும் அண்ணா - கலைஞர் அறிவாலயம்'' எனத் தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!