Published:Updated:

``விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பை உறுதி செய்க!" - மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

மு.க.ஸ்டாலின் கடிதம்

``தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது." - முதல்வர் ஸ்டாலின்.

``விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பை உறுதி செய்க!" - மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

``தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது." - முதல்வர் ஸ்டாலின்.

Published:Updated:
மு.க.ஸ்டாலின் கடிதம்

`தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது!' என முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

குடியரசு தின அணிவகுப்பையொட்டி, தமிழக அரசின் அலங்கார ஊர்தி 4-வது சுற்று வரை சென்ற நிலையில், வ.உ.சி, வேலு நாச்சியார் ஆகியோர் தேசிய அளவில் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர்கள் இல்லை எனக்கூறி மத்திய அரசு நிராகரித்து தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்
மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்

இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழக அலங்கார ஊர்தி தொடர்பாக மாநில அதிகாரிகள் மூன்று முறை குழுவிடம் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். திருத்தங்கள் செய்து சமர்ப்பிக்கப்பட்ட 7 மாதிரிகளையும் மத்திய அரசின் குழுவினர் நிராகரித்திருப்பதை ஏற்க முடியவில்லை. குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உசி. மகாகவி பாரதியார், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. மாண்புமிகு பிரதமர் அவர்கள் இதில் உடனே தலையிட்டு விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும்" என ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism